இந்தியாவின் கிராமப்புற பகுதியில் அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்ட விடுதலை முதல் பாகம் மற்றும் 2-ம் பாகம், சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாம் (IFFR) 2023-ல் திரையிடப்பட்டு பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இது குறித்து சோனி மியூசிக் சவுத் (இந்தியா) இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது
தமிழில் “விடுதலை” என்றால் சுதந்திரம். இந்த படம் பகுதிகளைக் கொண்ட திரைப்படமாகும். இந்தியாவின் கிராமப்புற பகுதியில் அடக்குமுறை மற்றும் அநீதிக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இருப்பினும், இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களின் காட்சிகளையும் ஒரே திரைப்படமாக இணைத்து லைம்லைட் பிரிவின் கீழ் ரோட்டர்டாம் (IFFR)-ல் திரையிட அனுப்பியுள்ளார்.
அதன்படி விடுதலை பகுதி 1 மற்றும் பகுதி 2 ஜனவரி 31 அன்று IFFR இல் திரையிடப்பட்ட நிலையில், பிப்ரவரி 3 அன்று மீண்டும் திரையிடப்பட உள்ளது. விடுதலைப் பாகம் 2-ன் திரையரங்கு வெர்ஷன் அதிக ரன்னிங் டைம் கொண்டது என்றும், இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படாத காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விடுதலை படத்திற்கு உதவிய துணைவன்
வெற்றிமாறன் ஆடுகளம் (2011), விசாரணை (2015), மற்றும் அசுரன் (2019) போன்ற யதார்த்தமான படங்களை இயக்கி முத்திரை பதித்தவர். விடுதலை படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட், கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்., ராமர் படத்தொகுப்பு பணிகளை செய்திருந்தார்.
பா.ஜெயமோகனின் "துணைவன்" சிறுகதையில் விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டது. விடுதலை முதல் பாகம் 31 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியானர். காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சூரி இந்த படத்தின் மூலம் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.நேர்மையான போலீஸ் கான்ஸ்டபிளாக அவரது கேரக்டர் பாராட்டுக்களை பெற்றிருந்தது. வெற்றிமாறனும் விஜய் சேதுபதியும் கூட படத்தில் சூரியின் அற்புதமான நடிப்பை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy