மன்னார்

 • All News
 • பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற மேசமான செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய மாணவன்!!!.
 பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற மேசமான செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய மாணவன்!!!.
Feb 15
பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற மேசமான செயல்! கையும் மெய்யுமாக சிக்கிய மாணவன்!!!.

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை கொண்டு சென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய போது கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தற்போது கா.பொ.த. உயர் தர பரீட்சை ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்தின் அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் உயர் தர பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றது.கடந்த சில தினங்களுக்கு முன் உயர் தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை இடம் பெற்றது. இதன் போது அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலையிலேயே உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றார்.இந்த நிலையில் குறித்த பாடசாலை அதிபரின் மகனான மாணவன் கணித பாட பரீட்சையின் போது குறித்த பரீட்சை மண்டபத்தினுள் மறை முகமான முறையில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.இந்த நிலையில் பிறிதொரு பாடசாலையின் பரீட்சை மண்டபத்தில் கடமையில் இருந்ததாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கணித பாடத்திற்கான பரீட்சை வினாத்தாளை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அதனை ஒரு ஆசிரியருக்கு அனுப்பி அதற்கான விடையை குறித்த ஆசிரியர் மீள பெற்று குறித்த மாணவனுக்கு கையடக்கத் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியின் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக கூறப்படும் குறித்த வினாக்களுக்கான விடையை தொலைபேசியை பார்த்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதிக் கொண்டிருந்தார்.இதன் போது குறித்த பரீட்சை மண்டபத்தில் பரீட்சை கடமையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் குறித்த மாணவன் கையடக்கத் தொலைபேசியை பார்த்து விடை எழுதிக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார்.உடனடியாக குறித்த ஆசிரியர் குறித்த மாணவனை கையோடு  பிடித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வித் திணைக்கள அதிகாரிகள், மற்றும் அடம்பன் பொலிஸ் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. உடனடியாக குறித்த பரீட்சை மண்டபத்திற்கு வருகை வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.குறித்த சம்பவத்துடன் ஈடுபட்டதாக கூறப்படுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்கள் கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுத

Feb02

மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல்

Feb22

மன்னார் சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வதற்கு வவுன

May22

மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத

Feb15

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்த

Feb09

மன்னார் மற்றும் மடு வலய கல்விப் பணிமனைக்குட்பட்ட முன்

Feb06

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் ஓலைத்தொடுவாய் பக

Feb06

இந்திய இழுவைப்படகுகளின் அத்து மீறிய வருகையினால் இடம்

Feb11

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுத

Feb06

தலைமன்னார் பிரதான வீதி எருக்கலம் பிட்டி பகுதியில் நேற

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:34 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:34 pm )
Testing centres