பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அப்பா விஜயக்குமாரை வம்புக்கு இழுப்பது போல் வனிதா அடிக்கடி பேசி வருகிறார்.
இதனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் மட்டுமல்ல, வெளியில் சென்ற பிறகும் வனிதா இன்னும் னெ்னவெல்லாம் பண்ண போகிறாரோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
நடிகை மஞ்சுளா -நடிகர் விஜயக்குமாரின் மூத்த மகளான வனிதா விஜயக்குமார், விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சில படங்களில் மட்டும் நடித்த வனிதா, சொந்த வாழ்க்கையில் நடந்த அடுத்தடுத்த பல பிரச்சனைகளால் மீடியாக்களால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள வனிதா, அடிக்கடி அப்பா விஜயக்குமார் பற்றி பேசி வருகிறார். குடி அல்லது கடி டாஸ்க்கின் போது, அப்பாவின் சரக்கு பாட்டிலை தெரியாமல் திருடி எடுத்து குடுத்தது உண்டா என ஒரு கேள்வி வந்தது.
அந்த டாஸ்க்கின் போது, இதில் எதற்காக எங்க அப்பாவை இழுக்க வேண்டும். ஏற்கனவே அந்த ஆளு என் கூட பேசுறது இல்ல. திட்டி தீர்கிறார். இதில் இப்படி ஒரு கேள்வி அவசியமா என விஜயக்குமார் பற்றி பேசினார்.இதை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோவில், இந்த வாரம் நடத்தப்பட்ட, நீ யாருன்னு எனக்கு தெரியும் என்ற டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் அளித்த ஓட்டுக்கள் எண்ணிக்கையில் மற்றவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக காட்டப்பட்டது.
இதில் வீட்டில் நாட்டாமை செய்பவர் என்ற பட்டம் வனிதாவிற்கு வழங்கப்படுகிறது. 14 போட்டியாளர்களில் 12 பேர் வனிதாவின் பெயரை சொன்னதாக அனிதா கூறுகிறார். இந்த போர்டை கழுத்தில் மாட்டிக் கொள்ளும் வனிதா, டாடி...உங்க பேர காப்பாத்திட்டேன் டாடி என சொல்கிறார்.
நாட்டாமை படத்தில் சரத்குமாரின் அப்பா ரோலில் நடித்த விஜயக்குமார் நாட்டாமையாக நடித்ததையே வனிதா இன்று கூறி உள்ளார்.
இந்த பார்த்த ரசிகர்கள், இவர் ஏன் அடிக்கடி நடிகர் விஜயக்குமாரை வம்பு இழுப்பதை போல் பேசுகிறார். ஏற்கனவே இந்த வாரம் முழுவதும் காஃபிக்காக இவர் பண்ணிய அலம்பல் தாங்க முடியல. இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறாரோ தெரியவில்லை.
பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே விஜயக்குமாரை வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். வெளியில் போன பிறகு என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ தெரியவில்லை என பலர் கூறுகின்றனர்.
இதேவேளை, இன்றைய நிகழ்ச்சியில் தாமரைக்கும் வனிதாவுக்கு போலவே பட்டம் வழங்கப்பட்டது. விஷ பாட்டில், நாடகக்காரி என பெயர் வழங்கப்பட்டதால் ஏனை போட்டியாளரிடம் எகிறியுள்ளார்.