முகவரிகாட்டிய மனிதர்கள்

 • All News
 • ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர்!
ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர்!
Oct 28
ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர்!
ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர்.

சோழ மன்னர்கள் சுமார் 300 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தனர். இதில் ராஜராஜ சோழன் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவரது மகன் ராஜேந்திர சோழன் கி.பி. 1014 ஆம் ஆண்டு மன்னராக முடி சூடி கொண்டார். மன்னரான பின்னர் புதிய தலைநகரை ஏற்படுத்தினார்.

கங்கை கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்ட அந்த நகரிலிருந்தபடி பல வெற்றிகளைக் குவித்தார். சோழ ராஜ்ஜியத்தையும் வளம் கொழிக்கும் சொர்க்கபூமியாக மாற்றினார். 30 ஆண்டுகள் மகத்தான ஆட்சி புரிந்தார். தலைநகரை மாற்றியது ஏன் தஞ்சையைத் தலைநகராக் கொண்டு சோழ ராஜ்ஜியம் தழைத்தோங்கியிருந்த நிலையில் வடக்கிலிருந்து அதாவது தற்போதைய கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அடிக்கடி படையெடுப்புகள் நடந்தன. இதனால் தமிழகத்தின் மத்தியப் பகுதியில் தலைநகரை மாற்ற முடிவு செய்தே கங்கை கொண்ட சோழபுரத்தில் புதிய தலைநகரை ஏற்படுத்தினார்

ராஜேந்திர சோழன். கங்கையை வென்ற சோழன் இவரது ஆட்சிகாலத்தில் தான் வட இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து வெற்றியும் பெற்றார். கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக, தான் உருவாக்கிய தலைநகருக்கு கங்கை கொண்ட சோழபுரம் என்றும் பெயர் சூட்டினார். இந்த கங்கை கொண்ட சோழபுரம் தான் கி.பி. 11 ஆம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கே தலைநகரமாகவும் விளங்கியது.

மிகப் பெரிய தலைநகரம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரன் அமைத்த தலைநகரம் மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. எதிரிகள் அத்தனை சீக்கிரம் ஊடுறுவி விடாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச் சுவரைக் கட்டினார் ராஜேந்திரன். அருகிலேயே கொள்ளிடம் ஆறும் இருந்ததால் வளமைக்கும் குறைவில்லாமல் சொர்க்க பூமியாக திகழ்ந்ததாம் கங்கை கொண்ட சோழபுரம்.

மிகப்பெரிய சிவ ஆலயம் தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தார். சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான்.

கோவிலின் கட்டுமானப்பணி 4 ஏக்கர் பரப்பளவில் 160 அடி உயரமுள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் கலை நயத்துடன் எண்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலின் கட்டுமானம் தற்கால பொறியாளர்களையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. மேலும் தஞ்சைப் பெரிய கோவிலை விட இந்த கோவிலின் கட்டுமான நுனுக்கம்தான் மிகச் சிறப்பானது என்று கட்டடக் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

கடாரம் கொண்டான் ராஜேந்திரசோழன் தனது பெரும் கடல் படையுடன் கடாரம் என்று அழைக்கப்பட்ட மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை வென்று சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்தார். கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

இந்த போர்களில் பிணைக் கைதிகளாக கொண்டு வரப்பட்ட வீரர்களை கொண்டு கங்கைகொண்ட சோழபுரத்தை எழில்மிகு நகரமாக மாற்றினார். சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் உட்கோட்டை என்ற இடத்தில் பிரமாண்ட கோட்டை அமைத்து அதற்குள்ளே மாளிகைமேடு என்ற இடத்தில் அரண்மனை அமைத்து ஆட்சிபுரிந்தார். ஏரி வெட்டிய சோழன் அத்துடன் இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்கை வளம்பெற மேற்கு பகுதியில் சோழகங்கம் என்னும் மிகப்பெரிய ஏரியை வெட்டி இந்த பகுதியில் விவசாயம் செழிக்க செய்தார். இந்த ஏரிதான் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. கங்கை வரை சென்று வென்று வந்தபோது அங்கிருந்து குடம் குடமாக கொண்டு வந்த தண்ணீரை இந்த ஏரியில் ஊற்றினார்களாம்.

பாண்டியனை விரட்டி விரட்டி வென்ற ராஜேந்திரன் அதேபோல பாண்டிய மன்னர்கள், சோழர்களின் பராக்கிரமத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர். இதனால் தங்களது மணிமகுடத்தை சோழர்கள் கைப்பற்றி விடாமல் தவிர்ப்பதற்காக இலங்கைக்குக் கொண்டு போய் பத்திரப்படுத்தினர்.

இதை பறித்து வர ராஜராஜ சோழன் முயன்றும் முடியவில்லை. ஆனால் ராஜேந்திர சோழன் மிகவும் சாணக்கியமாக செயல்பட்டு மணிமகுடத்தை பறித்துக் கொண்டு வந்தார். கூடவே சிங்கள மன்னர்களையும் போர் புரிந்து வென்றார். ராஜராஜனை விட வீரம் மிக்கவர் தந்தை ராஜராஜ சோழனை விட வீரம் மிக்கவர், மதியூகி என்று பாராட்டப்படுகிறார் ராஜேந்திர சோழன். தோல்வியே அறியாதவர் இவர். தோல்வியைச் சந்திக்காத, அதிக வெற்றிகளைக் குவித்த ஒரே இந்திய தமிழ் மன்னர் என்றும் போற்றப்படுகிறார்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

 • யாழ்சிறி பேஸ்புக்
 • யாழ்சிறி ட்விட்டர்
 • யாழ்சிறி யு டியூப்
 • வரவிருக்கும் நிகழ்வுகள்
  Oct27

  வரலாற்றில் முதன்முதலாக பிரபல அந்தஸ்து பெற்ற குதிரைதான

  Oct27

  மாவீரன் நெப்போலியனின் குதிரையின் பெயர்தான் மாரேங்கோ,

  Oct27

  இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு

  Oct27

  14 அங்குலத்தில் மனிதர்களா? எப்படி சாத்தியம்? ரீல் விடாதி

  Dec04

  உள்ளே போனவர்கள் திரும்ப வரவே முடியாத கொடூர பாம்புத்தீவ

  Oct27

  பாம்பரிய மரங்களை நாம் சங்க கால இலக்கியங்களின் வரிகளில்

  Oct27

  பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே

  Oct28

  உலகிலேயே மிகப் பெரிய மரமாக ஹைபெரியன் (Hyperion) அடையாளப்படுத

  Oct28

  விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோ

  Oct28

  சீதையுடன் ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தபோது, சீதை ‘க

  Oct28

  உலகின் உயரமான மனிதன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் !

  Oct28

  நிலாவரையை அறியாதவர்கள் நம்மில் யாராவது இருப்பார்களா? ப

  Oct28

  வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய த

  Oct28

  அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசையை ஒடுக்கியவன் தமிழ

  Oct28

  ஜப்பானிய மன்னர்களின் பாதுகாவலர்கள். எதிரிப்படைக்கு சி

  Oct28

  மகாகவி பாரதியார் பற்றி சுவையான சிறு குறிப்புகள் தமிழ்

  Oct28

  அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும்

  Oct28

  பல்வாள் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதிய

  Oct28

  வெள்ளையரை மிரளவைத்த வீரன் பாண்டாரவன்னியன் “”முதுகு க

  Oct28

  உலகில் தாஜ் மஹாலை விரும்பாதவர்கள் என்று ஒருவர் கூட இரு

  Oct28

  நோக்கு வர்மம் என்றால் என்ன? அதன் தொழிற்பாடுகள் என்ன? அத

  Oct28

  உலகில் பழமையான தற்காப்பு கலை அது இப்போதும் உயிர்ப்புடன

  Dec15

  வெறும் 11 பேர் மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு.. அதுக

  Oct28

  உலகின் மிக குள்ளமான மனிதர் உலகின் மிக குள்ளமான மனிதரா

  Oct28

  உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப

  Oct28

  உலகப் பேரதிசயங்களில் அதிசயம், சீனப் பெருஞ்சுவர். நிலவி

  Oct28

  உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகி

  Oct28

  இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்

  Oct28

  ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமா

  Oct28

  அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும்

  Share News