கொரோனா வைரஸ்

 • All News
 • கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்!
கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்!
Mar 19
கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்!

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது.காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும் மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அதிரவைத்தது.இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்திற்கு வந்தது. இந்த வடிவமும் பிஏ, பிஏ-1, பி.ஏ-2, பி.ஏ-3 என்று 4 வகையாக உருமாற்றம் அடைந்தது. அதோடு மின்னல் வேகத்திலும் பரவியது.என்றாலும் ஒமைக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதே சமயத்தில் டெல்டா பிளசை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் உதவியது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ் தான் அதிக அளவில் பரவி இருக்கிறது.இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒமைக்ரான் அலை வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் ஒமைக்ரானால் உருவான 3-வது அலை கட்டுக்குள் அடங்கியது. தற்போது இந்தியாவில் கொரோனா 3-வது அலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இதற்கிடையே கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 4-வது அலை வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டது. என்றாலும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒமைக்ரான் பி.ஏ-2 வகை வடிவம் பரவுவதால் இந்த நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.இதன் தொடர்ச்சியாக மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பி.ஏ-2 பரவி அடுத்த அலையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் அடுத்தடுத்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.இதுவரை நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஒமைக்ரான் புதிய வடிவம் காரணமாக அடுத்த அலை வரலாம். அல்லது வராமலும் போகலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனால் புதிய அலை எழுந்தால் அது எப்போது வரும் என்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது.இதனால் கொரோனாவின் அடுத்த நிலை பற்றி மருத்துவ நிபுணர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் திணறியபடி உள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Sep18

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Aug30

இந்தியாவில் 

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar22

இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்த

May19

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் முதி

Mar15

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Feb14

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுப

Mar24

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

May31

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Jul19

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்கா

Sep21

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,692 பேர் கொரோனா

May30

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Jun29

இந்தியாவில் 

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (10:49 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (10:49 am )
Testing centres