பிரான்ஸ்

 • All News
 • பிரான்சில் இன்று பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு
பிரான்சில் இன்று பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு
Jun 12
பிரான்சில் இன்று பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு

முதல் சுற்றுவாக்களிப்புபிரான்சில் இன்று (12) பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு இடம்பெறவுள்ளது.அரச தலைவர் தேர்தல் இடம்பெற்று அதில் இமானுவேல் மக்ரன் இரண்டாவது தவணைக்குரிய பதவிக்காலத்துக்கு வெற்றி பெற்ற சில வாரகாலத்துக்குப் பின்னர் இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.

அரசதலைவர் இமானுவேல் மக்ரன் தனது கொள்கைகளை சுலபமாக நிறைவேற்ற முடியுமா? இல்லையா? என்பதற்குரிய முடிவை வழங்கும் மக்கள் தீர்ப்பின் முதற்சுற்று வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது.இன்றைய தேர்தலில் 6,293 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் 55.8 வீதத்தில் 3,514 ஆண்வேட்பாளர்களும் 2,779 பெண்வேட்பாளர்களும் உள்ளனர். ஆனால் வாக்களிப்பு வீதம் கடுமையாக வீழ்ச்சியடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.பிரான்சில் இன்று பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு  இரண்டுகட்ட  சுற்றுவாக்களிப்புஇன்றும் எதிர்வரும்19 ஆம் திகதியும் இடம்பெறவுள்ள இரண்டுகட்ட வாக்களிப்பின் ஊடாக அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மக்ரனுக்கு பெரும்பான்மை கிட்டினால் தான் அவரது ஆட்சி சுமூகமாக போகும் என்பதால் இந்தத் தேர்தல் அவருக்கு முக்கியமானது.மக்ரனின் மையவாத கூட்டணிக்கு எதிராக உள்ள ஜேன்-லூக் மெலன்சோனின் தலைமையில் உள்ள முக்கிய இடதுசாரி அணி கடுமையான சவாலை கொடுக்கிறது.

577 பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றத்தின் அறுதிப்பெரும்பான்மைக்கு 289 இடங்கள் தேவை என்ற நிலையில், புதிய கருத்துக் கணிப்பின்படி, மக்கரனின் கூட்டணி 275 முதல் 315 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரான்சில் இன்று பொதுத் தேர்தலின் முதல் சுற்றுவாக்களிப்பு முதல் சுற்று வாக்கெடுப்பிலேயே வேட்பாளர் ஒரு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இன்று அவர் 50வீத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டுமென்பது நியதி.ஆனால் இந்த வாய்ப்பு கிட்டாவிட்டால் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு 19 ஆம் திகதி இடம்பெறும். முதல் சுற்றில் 12.5 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப்பெற்ற வேட்பாளர்கள் இறுதிசுற்றுக்கு செல்வார்கள். இறுதிச்சுற்றில் அதிக வாக்குகளை பெறுபவரே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கிற்கு, சிற

Mar20

பிரான்ஸில் பிறக்கும் தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்

Mar15

உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா த

Jun12

முதல் சுற்றுவாக்களிப்பு

பிரான்சில் இன்று (12) பொதுத

Mar27

  பிரான்ஸில் குறைந்த முதல் நடுத்தர வருமானம் ஈட்டும்

Mar22

பிரான்சில் குப்பை கூளமாக கிடப்பதாகக் கூறி தனது பாரம்ப

Mar30

பிரான்ஸ் முழுவதும் பருவ காய்ச்சல் பரவி வரும் நிலையில்

Feb10

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த குடும்பம் ஒன்றிற்கு யா

Jun08
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 29 (01:04 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 29 (01:04 am )
Testing centres