இந்தியா

 • All News
 • பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரானார் ஜேபி நட்டா
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரானார் ஜேபி நட்டா
Jan 20
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரானார் ஜேபி நட்டா
பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜேபி நட்டா இன்று அக்கட்சியின் தேசியத் தலைவராக முறைப்படி கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்

2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, பாரதிய ஜனதா கட்சிக்கு அமித் ஷா தலைவரானார்.. அவரது தலைமையில் கட்சி, நல்லதொரு வளர்ச்சியை பெற்றது. அவரது தலைமையில்தான் 2019 பாராளுமன்ற தேர்தலை கட்சி சந்தித்தது. அதில், முந்தைய 2014 தேர்தலைவிட கூடுதல் இடங்களை பிடித்து பாரதீய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
அப்போது கட்சிக்கு தேர்தல்களில் தொடர் வெற்றியை தேடித்தந்த நிலையில் அமித் ஷா, பிரதமர் மோடியின் 2-வது அரசில் உள்துறை மந்திரி ஆனார். ஆனாலும், அவர் கட்சிப்பதவியில் தொடர்ந்தார். அவருக்கு உதவியாக செயல் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

அந்தப் பதவியில் முந்தைய மோடி அரசில் சுகாதார துறை மந்திரி பதவி வகித்த ஜே.பி.நட்டா அமர்த்தப்பட்டார். அவர் பாரதீய ஜனதாக் கட்சியின். செயல் தலைவராக 2019, ஜூன் 17 ஆம் திகதி பொறுப்பேற்றார். பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா ஆகிய இருவராலும் விரும்பப்படுபவர், எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர் என்பது ஜே.பி.நட்டாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சிக்கு தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கட்சியின் அமைப்பு தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார்.. பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்காக ஜே.பி.நட்டா சார்பில் மாநில கட்சி தலைவர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தனர். வேறு யாரும் மனுதாக்கல் செய்யயாததால் ஜேபி நட்டா, தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug17

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அதி

Sep20

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாவால் வ

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

Sep14

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி கடந்

Aug12

கொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க

Jul20

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால

Sep07

அருணாசல பிரதேசத்தின் மேல்சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் வேட

Sep05

சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும

Jan30

தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்

Sep14

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே இரு

May28

கொரோனா வைரஸ் பாதிப்பின் ஊரடங்கு காலக்கெடு வருகிற 31-ந்த

Sep10

மணப்பாறையில் உடலில் 8 இடங்களில் கத்திக் குத்து காயங்க

Jun13

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

May15

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 6 நாட்கள் பணிய

Sep12

மாணவா்கள் அனைத்து விதமான வளா்ச்சிகளைப் பெறுவதற்கு மத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (21:28 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (21:28 pm )
Testing centres