இலங்கை

 • All News
 • கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!
கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!
Oct 26
கடன் நெருக்கடிக்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது – பந்துல!

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்கத்தால் தற்கொலை செய்து கொள்ள முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.சுதந்திரத்தின் பின்னர் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 'இவ்வாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் மறை 7 – 8 சதவீதம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திரத்தின் பின்னர் பொருளாதாரம் இவ்வாறு மறை பெருமானத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன் காரணமாக நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை. டொலரும் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாக உருவாகியுள்ள இந்த நெருக்கடியை தீர்ப்பதற்கு தகுதிவாய்ந்த எவரும் எமது நாட்டில் அடையாளங் காணப்படவில்லை.தற்போது லசார்ட் நிறுவனத்திடமே எமது எதிர்கால நற்பெயர் தங்கியுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணாமல் எந்தவொரு வேலைத்திட்டத்திற்காகவும் எம்மால் கடன் பெற முடியாது. இது குறிப்பிட்டவொரு அரசியல்வாதியால் தோற்றம் பெற்ற பிரச்சினை அல்ல.பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக கடன் பெறப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரையறை காணப்படுகிறது. எனினும் அந்த வரையறையையும் மீறி மேலும் மேலும் கடன் பெறப்பட்டுள்ளது.தனிநபரொருவருக்கு வருமானத்தை விட செலவுகள் அதிகமாகக் காணப்பட்டால் அவருக்கு கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும். அந்தக் கடனை மீள செலுத்துவதற்காக அவருக்கு மேலும் கடன் பெற வேண்டியேற்படும்.இவ்வாறு பெற்ற கடன்களை மீள செலுத்த முடியாத நிலைமையில் 'என் மரணத்திற்கு நானே காரணம்' என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்.ஆனால் அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது. அரசாங்கத்தில் யார் தற்கொலை செய்து கொள்வார்? என்றார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Mar07

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Jan30

கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்

Feb20

 அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Oct26

முல்லைத்தீவு குருந்துார் மலை மற்றும் வவுனியா வெடுக்க

Mar05

கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி

Oct17

வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங

Apr01

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Mar12

எமது ஆட்சியாளர்கள் அவ்வப்போது இறைமை, தன்னாதிக்கம், 

Jun14

ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொ

Mar09

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால்

Jan20

களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (10:29 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (10:29 am )
Testing centres