கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.எம்.பீ. அழஹகோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் பண்ணையாளர்கள் அநேகமானோர் முட்டை உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரச வர்த்தமானியை வெளியிடும் போது குறித்த தரப்பினர் சிலர் எங்களுடன் கலந்துரையாடினார்கள்.
முட்டைஒன்றினை 43 ரூபா மற்றும் 45 ரூபாவிற்கு விற்குமாறு சில்லறை விலையை நிர்ணயித்தார்கள். நாம் அதை எதிர்த்து இவ்வாறு செய்யும் போது பண்ணைகளை கைவிடும் நிலை ஏற்படும் என்று கூறினோம். இருப்பினும் தான்தோன்றித்தனமாக வர்த்தமானியை வெளியிட்டார்கள். அதன் விளைவாக இன்று இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில்இ கோழி பண்ணையாளர்கள் இது தொடர்பாக கூறுகையில் கோழி தீவனம் மற்றும் ஏனைய பொருட்கள் விலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எம்மால் அரசாங்கம் கூறும் விலையில் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாது.தற்போது பண்ணைகளில் உள்ள 40 வீதமான கோழிகளை அகற்றினோம்.
அந்த கோழிகளுக்கு தேவையான தீவனப் பொருட்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமமே இதற்குப் பிரதான காரணமாகும்.குருநாகல் மாவட்டத்தில் உள்ள மாவத்தகம ஹெட்டிபொலஇ வாரியபொல குளியாப்பிட்டிய போன்ற ஆகிய பகுதிகளில் உள்ள கோழி பண்ணையாளர்கள் தமது தொழிலை கைவிட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ராகம வைத்திய பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தாக்க
நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
மன்னார் - சிலாவத்துறை பகுதியில் இன்று வியாழக்கிழமை (1
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய பேரவையில் இணையாது என
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுத
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடை
வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பொலிஸ் சிஜடி என
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
சந்தையில் வாகனங்களின் விலைகள் வேகமாக குறைவடைந்து வரு
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏக
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்