உடலில் காணப்படும் காயங்களால் வீதியில் சடலமாக கிடந்த இளைஞன் மீது எழுந்துள்ள சந்தேகம்
இன்று (12.08.2023) பதுளை - மஹியங்கனை பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பதுலுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நந்தன குமார என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவரின் தலையில் காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டு யானையின் தாக்குதலினால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy