Back
  • All News
  • BOULT ன் Crown R , Drift 2 , W40 TWS ...
BOULT ன் Crown R , Drift 2 , W40 TWS இயர்பட் வெளியாகின...!
Aug 22
BOULT ன் Crown R , Drift 2 , W40 TWS இயர்பட் வெளியாகின...!



இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுதான் bOULT. இது நுகர்வோர் அணியக்கூடிய வகையில் தற்போது அதன் சமீபத்திய அற்புதமான ஒரு புதிய தயாரிப்பை வழங்கியுள்ளது.

நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டிங்-எட்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரவுன் ஆர் ஸ்மார்ட்வாட்ச், டிரிஃப்ட் 2 ஸ்மார்ட்வாட்ச் மற்றும் W40 TWS இயர்பட் போன்றவை தற்போது அறிமுகப்படுத்துயுள்ளது. இதன் அம்சம், அழகியல், செயல்படும் விதம் என்று ஒவ்வொன்றும் இன்றைய நுகர்வோரின் பல்வேறு வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கிரவுன் ஆர் ஸ்மார்ட்வாட்ச் என்பது எதிர்காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த தயாரிப்பு எனலாம். அதன் 1.52-இன்ச் வட்ட உயர்-வரையறையும் அதோடுகூட பயன்படுத்த போதுமான அளவிலான திரை, 600 nits அளவிற்கு காணக்கூடிய அளவிற்கு திரையின் பிரகாசம் .இதுமட்டுமல்லாது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு அற்புதமான காட்சி அனுபவத்தையும் அளிக்கிறது. இதில் வசீகரிக்கும் காட்சி அனுபவம் மட்டும் அல்லாது கிரவுன் ஆரானது தடையற்ற புளூடூத் சேவையையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாது ஒரு பிரத்யேக ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோஃபோன் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் SpO2 போன்ற இரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு உட்பட 100 க்கும் மேற்பட்ட வசதிகளுடன் ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வகையிலும் வடிவமைக்கபட்டுள்ளது.

இந்த bOULTன் டிரிஃப்ட் 2 ஸ்மார்ட்வாட்ச் ஆனது துல்லியமாக வடிவமைக்கப்பட்ட வலுவான ஜிங்க் அலாய் மெட்டாலிக் ஃப்ரேமைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது ஆடம்பரமான புல்லட் சில்வர் மற்றும் டைம்லஸ் கோல்பிளாக் என்று இரட்டை நிறங்களை உடைய மெட்டல் ஸ்டிராப்பைக் கொண்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான இந்த கடிகாரங்களை உங்கள் எண்ணத்திற்கும், மனநிலைக்கும் ஏற்றவாறு 2499 ரூபாயில் தேர்வு செய்துகொள்ளலாம்.

2022 ஆம் ஆண்டில் வேகமாக விற்பனையாகும் புதுமைகளை கொண்டுள்ள இந்த டிரிஃப்ட் 2 ஸ்மார்ட் வாட்சானது நவீன டிரெண்டுகளுக்கு ஏற்றவாரு வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு கடிகாரமாகும் . இதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்காக பரவலான மக்களிடையே வெகுவான பாராட்டைப் பெற்று வருகின்றது. இந்த டிரிஃப்ட் 2 வகைகளில் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், நீட்டிக்கப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் மேம்பட்ட இணைப்பு விருப்பங்களுடன் இன்னும் அதிநவீன அனுபவம் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்த டிரிஃப்ட் 2 வகை கடிகாரமானது ஒரு நேர்த்தியான ஜிங்க் அலாய் மெட்டாலிக் ஃப்ரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1.85-இன்ச் HD திரையையும் 100க்கும் மேற்பட்ட விளையாட்டு ஆப்ஷன்களையும் ,உடற்பயிற்சி செய்வது தொடர்பான ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. இந்த டிரிஃப்ட் 2 ஆனது SpO2 என்கிற இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் இதய துடிப்பு கண்காணிப்பு திறன்கலை கண்காணிக்கும் வசதியுடனும் 150க்கும் மேற்பட்ட கிளவுட்-அடிப்படையிலும் ( cloud- based) செயல்படுகிறது. உங்கள் விரல் நுனியில் SMS மற்றும் அறிவிப்புகள் மூலம், உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையையும் இது நிர்வகிக்கிறது. இதில் உள்ள பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் Siri மற்றும் Google ன் உதவியை உடனடியாக அணுகலாம். ட்ரிஃப்ட் 2 ன் IP67 வாட்டர்- ரெஸிஸ்டண்ட் மதிப்பீடு மூலமாக தண்ணீர் மற்றும் வியர்வையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து கடிகாரத்தை பாதுகாத்துக்கொள்ளலாம். இவை ரூ.1499 என்ற கவர்ச்சிகரமான வெளியீட்டு விலையில் கிடைக்கும். இந்த டிரிஃப்ட் 2 என்பது ஜிங்க் அலாய் ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்ட பிங்க், ப்ளூ மற்றும் பிளாக் போன்ற ஸ்ட்ராப் வண்ணங்களின் காணப்படுகின்றது.

இந்த BOULT W40 TWS ஆகிய மூன்றும் ஒரு சிறந்த செயல்பாட்டிற்கான சரியான கலவையாகும். இவற்றில் குறிப்பிடத்தக்க 48 மணிநேர Playtimeம், அதோடு கூட இந்த இயர்பட் -ன் 45ms low- latency போன்றவை உங்கள் ஆடியோ அனுபவத்தில் ஒரு சிறந்த புரட்சியை ஏற்படுத்துவாதாக அமையும் . பிரீமியம் ரப்பர் கிரிப் மற்றும் QUAD மைக் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட W40 TWS உடன் தெளிவான தகவல்தொடர்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது.

பெர்ரி ரெட், ஐவரி ஒயிட், டெனிம் ப்ளூ மற்றும் காக்கி க்ரீன் உள்ளிட்ட வசீகரிக்கும் வண்ணங்களில் வழங்கப்பட்டுள்ள W40 உங்கள் தினசரி வழக்கத்தில் தடையின்றி நிச்சயம் ஒருங்கிணைப்பதாக அமையும். கவர்ச்சிகரமான இந்த BOULT W40ன் வெளியீட்டு விலை ரூ 899 ஆகும்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:50 am )
Testing centres