முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பில் இனந்தெரியாத நபர்களால் தமிழ் மீனவர்களின் நான்கு படகுகள் கடந்த (20-08-2023) இரவு முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குரிய இழப்பீட்டினை வழங்க வேண்டும் எனவும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy