அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் எட்டில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது.
2021 -முதல் 22 வரையிலான 12 மாதகாலப்பகுதியில் 1.3 மில்லியன் பெண்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள் என அவுஸ்திரேலிய புள்ளிவிபர திணைக்களம் மேற்கொண்ட தனிப்பட்ட பாதுகாப்பு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
ஆண்களே அதிகளவு இவ்வாறான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளனர் தெரியவந்துள்ளது.
13 வீதமான பெண்கள் பாலியல்துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர்,இவர்களில் 97 வீதமானவர்கள் ஆண்களே தங்களை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமானதாக தோன்றினாலும் 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது குறைவானே - அந்த ஆண்டில் தாங்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக 17.3 வீத பெண்கள் தெரிவித்திருந்தனர்.
மூன்றில்இரண்டு பெண்கள் தாங்கள் முகத்திற்கு நேரே துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் இவற்றில் தங்களின் அழகு மற்றும் பாலியல்வாழ்க்கை குறித்த கருத்துக்களும் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
57 வீதமான பெண்கள் இலத்திரனியல் சாதனங்கள் மூலமாக துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் - பெருமளவானவர்கள் இரண்டுவகையான துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
இலத்திரனியல் சாதன துன்புறுத்தல்களில் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் தேவையற்ற வீடியோக்கள் படங்கள் மற்றும் குறிப்பிட்ட நபரி;ன் விருப்பமின்றி அவரின் படங்களை பகிர்ந்துகொண்டமை போன்றவையும் காணப்படுகின்றன.
தங்கள் உடல் மற்றும் பாலியல்வாழ்க்கை குறித்த பொருத்தமற்ற கருத்துக்கள் குறித்தே அதிக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் 800000 இலட்சம் பெண்கள் இதனை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவுஸ்திரேலிய குற்ற மற்றும் நீதி புள்ளிவிபர திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.