வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையில் எதுவிதமான மாற்றங்களும் இல்லை
கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டு ஒரு கிலோகிராம் கோதுமை மாவுக்கான இறக்குமதிக்கான வரி 3ரூபா வரி அறிவிடப்பட்டது. தற்போது அது 6 ரூபாவாக.அதிகரிக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையில் மாற்றம் எற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோதுமை பயிரை இறக்குமதி செய்யும் போது, 6 ரூபா வரி விதிக்கப்பட்டாலும், அது வெதுப்பக உற்பத்திகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவில், கோதுமையை சந்தைப்படுத்தும் இரண்டு நிறுவனங்களின் நன்மைக்காக அரசாங்கம் கோதுமை மா இறக்குமதி அனுமதி பத்திர முறைமை அறிமுகப்படுத்தியது.
அந்த நிறுவனங்கள் கோதுமை பயிரையே இறக்குமதி செய்தன. அதன்போது, எது எவ்வாறாயினும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை குறைக்கப்படமாட்டாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy