இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
யாழ்ப்பாணத்தில் மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இன்று (03.08.2023) இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் தரம் ஐந்துடன் தனது பாடசாலை கல்வியை இடைநிறுத்திக்கொண்டார். அந்நிலையிலும் அவற்றை எல்லாம் தாண்டி அவர் ஊடக துறையில் தனக்கொன்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர்.
சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள், செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களும் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.
அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அந்நிலையில் கடந்த 2021 செப்டம்பர் 2ம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy