தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான ஒரு கருவியாக, QR அட்டை பயன்படுத்தப்படவுள்ளது
தேசிய எரிபொருள் அனுமதிக்கான QR அட்டை மேம்படுத்தப்பட்டு, தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வுக்கான ஒரு கருவியாக செயற்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நிலவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இருக்கும் வளங்களை முகாமைத்துவப்படுத்தி விநியோக வேலைத்திட்டமாக QR முறையை அறிமுகப்படுத்தப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளை சமாளித்து நெருக்கடிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய நிலவரத்திற்கமைய, 65 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் வாகனங்கள் QR கட்டமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,500 லட்சத்துக்கும் அதிகமான எரிபொருள் விநியோக பரிவர்த்தனைகள் QR அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவுகள், அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் எரிபொருள் சந்தையில் புதிய விநியோகஸ்தர்களை சேர்த்ததன் மூலம் எரிபொருள் இறக்குமதிக்கான நிதித் தேவைகள் நிர்வகிக்கப்பட்டதால் இனி QR குறியீடு அவசியமில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy