வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப்பது தவறு. அது யார் செய்திருந்தாலும் தவறு. மீண்டும் வெடுக்குநாறி ஆதி சிவன் கோவிலில் சிலை நிறுவப்படும். அதற்கு ஆளுநருடையதோ பிரதமருடைய அனுமதியோ பெறவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்திய வீதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற கட்சி காரியாலய திறப்பு விழாவில் கட்சி தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா காரியாலயத்தை திறந்து வைத்த பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.
உலகத்திலே எல்லா நாடுகளும் தங்களுடைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் சட்டங்கள் இருக்கின்றது. ஆனால் பெயர்கள் வித்தியாசப்படலாம். இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று அந்த நிலமை இல்லை. ஆனால் நாட்டை நிர்வகிப்பதற்கு சட்டம் தேவை.
எனவே இது புதிதானதல்ல. ஆளும் கட்சிகள் எதாவது ஒன்றை செய்யும் போது எதிர்க்கட்சிகள் எதிர்பதுதான் இங்குள்ள யதார்த்தம். அந்த வகையில் எதிர்கட்சிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனரே தவிர இந்த சட்டத்தில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால் இந்த பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் தொடர்பாக நாங்கள் கட்சி என்ற வகையில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் நாடாளுமன்றம் வரும்போது எங்கள் கருத்துக்களை தெரிவிப்போம். நாட்டிற்கு சட்டங்கள் தேவை.
அதேவேளை நீண்டகாலமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச்சட்டமூலமான மாகாண சபை முறைமை ஊடாகத்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என நீண்டகாலமாக நான் சொல்லி வருகின்றேன்.
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் றோலர் படகுகளில் அத்துமீறி புகுந்து மீன்படிக்க அனுமதி வழங்கவில்லை. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெளிவாக எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்கு புறம்பாக செயற்படாது என தெரிவித்துள்ளார்.
ஆகவே வீதிசட்டம் இருக்கின்றது. அதனை மீறி நடக்கின்ற விடயங்களை கட்டுப்படுத்தப்படும் போது அது நெறிப்படுத்தப்படுகின்றது. சட்டங்களை மீறி நடக்கும் போது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
நாட்டில் மட்டுமன்றி நாடாளுமன்றத்தில்கூட கருத்துக்கள
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
இந்திய அதானி குழுமம் எதிர்வரும் 10 ஆண்டுகளில் 100 பில்லிய
அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந
வளர்ந்து வரும் நாடுகளின் விருப்பங்கள், தொலைநோக்கு ஆகி
18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயத
நாட்டு மக்கள் கையில் பிள்ளைகளுடன் வீதியில் இறங்கிப் ப
கோழித் தீவனத்திற்கான விலை அதிகரிப்பு காரணமாக கோழிப் ப
இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையி
வெடுக்குநாறி ஆதி சிவன் கோவில் பிரச்சனையில் நடந்திருப
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் ஒருவரால்
ஊவா மாகாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அம்பாந் தோட
நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறை
புனர்வாழ்வு பணியகத்தை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ச