Back
  • All News
  • கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்ஸ் யூ...
கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்ஸ் யூத மத பெண்
Nov 06
கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்ஸ் யூத மத பெண்



பிரான்ஸில் யூத மதம் மீதான எதிர்ப்புகள் வந்துள்ள நிலையில் லியோன் 3 ஆம் வட்டாரத்தில் (Lyon Rhône) வசிக்கும் யூத பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

அடி வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த செயல் யூத-விரோத நோக்கத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என லியோன் அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் வீட்டின் கதவில் ஸ்வாஸ்திகா இலட்சணை வரையப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:31 am )
Testing centres