Back
  • All News
  • மனித மூளையை உண்ணும் அமீபா-பாகிஸ்தானில...
மனித மூளையை உண்ணும் அமீபா-பாகிஸ்தானில் பலர் உயிரிழப்பு!
Nov 08
மனித மூளையை உண்ணும் அமீபா-பாகிஸ்தானில் பலர் உயிரிழப்பு!



பல மாநிலங்களில் ‘மூளையை உண்ணும் அமீபா’வால் மக்கள் உயிரை இழக்கிறார்கள்.

‘நேக்லேரியா ஃபௌலேரி’ என்ற ஒற்றை செல் உயிரினம் இதுவரை பாகிஸ்தானில் 11 பேரைக் கொன்றுள்ளது. கராச்சியின் மத்திய மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இந்த அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், 45 வயது நபர் உயிரிழந்துள்ளர்.

மேலும் கராச்சியில் மூளையை தின்னும் அமீபா ‘நேக்லேரியா ஃபோலேரி’ மேலும் ஒருவரைக் கொன்றதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பெருநகரத்தின் கராச்சி தாங்கல் மண்டலத்தில் வசிக்கும் ஒருவர் நைக்லேரியா காரணமாக மேலும் உயிரிழந்துள்ளதாக சிந்து சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சிந்து சுகாதாரத் துறையின் பிரதிநிதி, பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்.

பாகிஸ்தானில் இதுவரை 11 பேர் ‘நேக்லேரியா ஃபோலேரி’ நோய்த்தொற்றால் (NFI) உயிரிழந்துள்ளனர். இந்த நோய் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சிந்து கேர்டேக்கர் சுகாதார அமைச்சர் சாத் காலிட் அறிவுறுத்தியுள்ளார்.

நன்னீர் ஆதாரங்களில் செழித்து வளரும் அரிதான உயிருக்கு ஆபத்தான அமீபா என்றும் அவர் தெரிவித்தார்.

குளோரின் இல்லாத குளங்களில் நீந்துவதை தவிர்க்குமாறு காலித் நியாஸ் மக்களை வலியுறுத்தினார். மூக்கில் தண்ணீர் வருவதைத் தவிர்க்குமாறு அவர் பரிந்துரைத்தார்.

மூளையை உண்ணும் அமீபா முதன்முதலில் அமெரிக்காவில் 1937 இல் தோன்றியது. இந்த அமீபா ஆறுகள், கால்வாய்கள் மற்றும் குளங்களில் வாழ்கிறது. மூக்கு, வாய் அல்லது காது வழியாக நுழைந்து மனித மூளையை சாப்பிடுகிறது. இருப்பினும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் மூளையை உண்ணும் அமீபா வழக்குகள் மிகவும் அரிதானவை. 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் 381 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனாவிலும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (01:36 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (01:36 am )
Testing centres