Back
  • All News
  • சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவ...
சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவதாக  புகாரளித்த  புலம்பெயர்ந்த பெண் !
Nov 10
சுவிட்சர்லாந்தில் தன்னை துன்புறுத்துவதாக புகாரளித்த புலம்பெயர்ந்த பெண் !



சுவிட்சர்லாந்தில், புலம்பெயர்ந்த பெண்ணொருவர், தனக்கு வேலை கொடுத்தவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், அடித்துத் துன்பப்படுத்துவதாகவும் கூறிய பெண் அவருக்கே பாதகமாக மாறியுள்ளது.

ஜெனீவாவில் வீடொன்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்துவந்த அப்  பெண், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தவர் ஆவார்.

ஆகவே, அவருடைய  புகார் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக சுவிட்சர்லாந்தில் தங்கியிருப்பதாக அந்த பெண் மீதே குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன   நாடுகடத்தப்பட இருப்பதாகவும் அவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையிட்டுள்ளது. அந்த அமைப்பின் நிபுணர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அந்த பெண்ணுக்கெதிராக பாரபட்சம் காட்டப்படுவதாலும், சுவிட்சர்லாந்தில் நியாயமற்ற வகையில் நடந்த விசாரணைகளால் அவர் மேலும்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர்.

அந்த வழக்கு தற்போது பெடரல் நீதிமன்றத்தில் நடந்துகொண்டுள்ளது. இதுவரை தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகின்றது 

வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்கள் தலையிட்டுள்ளது தங்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களுடைய குற்றச்சாட்டுகளையும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:19 am )
Testing centres