Back
  • All News
  • இந்தியாவை துவசம் செய்த பங்களாதேஷ்
இந்தியாவை துவசம் செய்த பங்களாதேஷ்
Sep 16
இந்தியாவை துவசம் செய்த பங்களாதேஷ்



ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும், வங்காளதேசமும் மோதின. 

 முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்திய இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. 

  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. 

 ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும் , டவ்ஹித் ஹ்ரிடோய் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 
 சிறப்பாக ஆடி நசும் அகமது 44 ரன்களும் , மகேதி ஹசன் 29ரன்களும் எடுத்தனர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. 

இந்தியா சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட் , முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

 இதையடுத்து 266 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 பந்துகளில் ரன் ஏதுமின்றி அவுட்டானார். அடுத்து வந்த திலக் வர்மா(5 ரன்கள்), கே.எல்.ராகுல்(19 ரன்கள்), இஷான் கிஷன்(5 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசி அசத்தினார். சூர்யகுமார் யாதவ் 26 ரன்களில் போல்ட் ஆனார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய அக்சர் பட்டேல் 42 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். 

சுப்மன் கில் 133 பந்துகளில் 121 குவித்து கேட்ச் ஆனார். இறுதியில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 259 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep01

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல...

Aug22

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அலைச்சறுக்கு சங்...

Aug24

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் அமைந்துள்ள தேசிய மெய்வல்லுநர் நிலை...

Sep13

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போத...

Aug22

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறவ...

Sep07

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் போர் 7 விக்கெட் வித்தியாசத்...

Sep15

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி  கொழும்பு பிரேமதாசா மை...

Aug22

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சர்வதேச அலைச் சற...

Sep14

டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் ரோமானி...

Aug17

பிரான்சில் நடைபெற்று வரும் உலக கோப்பை 4-ம் நிலை வில்வித்தை போட்ட...

Sep09

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோஹித் சர்மா, இலங்கை கிரிக்கெட் ஆத...

Aug12

பிரபல நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மூன்றா...

Sep12

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கையுடன் இந்திய அணி மோ...

Sep03

2023 ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இ...

Aug10

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை நடைப...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:32 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:32 am )
Testing centres