திருகோணமலை சர்தாபுர பகுதியில் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்இ 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Pow...
திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம...
கம்பஹா-கந்தானை பிரதேசத்தை சேர்ந்த இம்முறை உயர்தர பரீட்சைக்க...
இம்மாத இறுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்...
என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்...
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காமையினால் பயனாளிகளுக்கா...
Cordelia Cruises சுற்றுலா பயணக் கப்பல் கடந்த மூன்று மாதங்களில் ஒ...
யாழில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நேற்...
சீன மக்கள் குடியரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அதிநவீ...
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 குழந்தைகள்...
சிறைச்சாலை திணைக்களம் காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள...
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காணப்படும் நிலைய...
அரசியலுக்கு பிரியாவிடை வழங்கவில்லை நான் நாட்டை விட்டு ஓடவி...
நிகவெரட்டிய, ஹுலுகல்ல நீர்த்தேக்கத்தில் குளத்தில் மீன்பிடி நடவடி...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy