Back
 • All News
 • தோமஸ் செல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு
தோமஸ் செல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு
Jan 05
தோமஸ் செல்வா எடிசன் வாழ்க்கை வரலாறுதாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

Thomas Alva Edison In Tamil

உங்கள் பையனை இனி எங்கள் பள்ளியில் அனுமதிக்க முடியாது. அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன், அவன் ஒரு முட்டாள் பையன் என்று பள்ளி நிர்வாகம் ஒதுக்கியது. பின்னாளில் அவருடைய பாதம் நம் கல்லூரியில் படாதா அவருடன் ஒரு சந்திப்பு கிடைக்காதா என ஒட்டுமொத்த அறிஞர்கள் உலகமும் காத்திருந்தது. அந்த பையன் தாமஸ் ஆல்வா எடிசன்இந்தப்பதிவில் தாமஸ் ஆல்வா எடிசனின் இளமைக்காலம், அவரது அம்மாவின் அற்புத செயல், முதல் கண்டுபிடிப்பு, மின்சார விளக்கு கண்டுபிடிப்பு, தாமஸ் ஆல்வா எடிசனின் 10 முக்கிய கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாசிக்கலாம்.

 

பிறக்கும் போது சில குழந்தைகள் அறிவுக்கூர்மை உடைய குழந்தைகளாக பிறப்பது உண்டு. ஆனால் அப்படி பிறந்த அனைத்து குழந்தைகளுமே பின்னாளில் சாதித்துவிடும் என்பதற்கு உறுதி கூற இயலாது. அதுபோலவே தான் அறிவுக்கூர்மை அதிகம் இல்லாமல் சராசரியாக பிறக்கும் குழந்தை பின்னாளில் சாதிக்காது என்பதற்கும் எவரும் உறுதி கூற முடியாது. ஆனால் அந்தக்குழந்தைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்து வளர்க்கும் பெற்றோர் கிடைத்து கடுமையான முயற்சி செய்திடும் பழக்கம் கொண்டிருக்கும் எந்தக்குழந்தையும் பின்னாளில் சாதித்துவிடும். இதற்கு யார் வேண்டுமானாலும் உறுதி கூற முடியும். 

ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களால் தேறாது என ஒதுக்கப்பட்ட ஒரு மாணவர் தான் எடிசன். ஆனால் பின்னாளில் அவர் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவெடுத்தார் என்றால் அதற்கு அவரது கடும் உழைப்பு தான் காரணம். இதனால் தான் உலகம் இன்றும் இவரை கண்டுபிடிப்புகளின் அரசன் என வர்ணிக்கிறது.

If you are searching like “thomas alva edison in tamil” then this is the right place to know about thomas alva edison in tamil. Thomas alva edisons birth, thomas alva edison’s first research, about thomas alva edison’s mother, how thomas alva edison founded eletric bulp covered in this article. 

Table Of Content : Biography Of Thomas Alva Edision In Tamil

எடிசன் பிறப்பு ​[Thomas Alva Edison Birth]
எடிசனின் முதல் ஆராய்ச்சி ​[[Thomas Alva Edison First Research]
எடிசன் அம்மா சொன்ன பொய் [About Thomas Alva Edison’s Mother]
தோல்வியைக்கண்டு துவளாதவர் எடிசன் ​[[Thomas Alva Edison’s Will Power]
எடிசனும் மின்சார விளக்கு கண்டுபிடிப்பும் ​[[Thomas Alva Edison Electric bulb Invention In Tamil]

10 Inventions By Thomas Alva Edison

1. மின் வாக்கு பதிவு கருவி [Electrographic Vote-recorder]

2. யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் [Universal stock ticker]

3. செக்ஸ்டுப்ளெக்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தந்தி [Sextuplex and multiplex telegraph]

4. கார்பன் ஒலிவாங்கி [Carbon microphone]

5. ஃபோனோகிராஃப் [Phonograph]

6. ஒளிரும் விளக்கு [Incandescent light bulb]

7. மின்சார விநியோக முறை [Electricity distribution system]

8. மின்சாரத்தை அளவிடும் மீட்டர் [The Electric Power Meter]

9. எலக்ட்ரிக் கார்களுக்கான அல்கலைன் பேட்டரி [Alkaline Battery for Electric Cars]

10. ஃப்ளோரோஸ்கோப் [fluoroscope]

11. இரும்பை பிரித்தெடுக்கும் முறை [Magnetic Iron Ore Separator]

எடிசன் பிறப்பு ​[Thomas Alva Edison Birth]

பிப்ரவரி 17,1847 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 வது மகனாக பிறந்தார் எடிசன். இளம் வயதிலேயே ஸ்கார்லெட் எனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட எடிசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளால் அவருக்கு 4 வயதுவரைக்கும் பேச்சும் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலிலும் கூட எடிசனுக்கு எந்தவொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் அதில் கேள்வி கேட்கும் பழக்கமும் தொற்றிக்கொண்டது. 

எடிசனின் முதல் ஆராய்ச்சி ​[[Thomas Alva Edison First Research]

தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருந்த எடிசன் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சி என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதில் எல்லாருக்குமே பெரிய ஆர்வம் இருக்கும். ஆம் அது நடந்தது அவருடைய 5 ஆம் வயதில். அப்போது முட்டைகளின் மேல் தாய்க்கோழி அமர்ந்து இருப்பதையும் பின்னாளில் கோழிக்குஞ்சு உருவாவதையும் பார்த்த எடிசனுக்கு வந்தது சந்தேகம். இதனை தீர்த்துக்கொள்ள சில முட்டைகளின் மேல்  அவரும் அமர ஆரம்பித்தார். அவரது குடும்பம் அதை கண்டுபிடிக்கும் வரை அவர் அதை தொடர்ந்துகொண்டே தான் இருந்தார். இப்படித்தான் தான் பார்க்கும் ஒவ்வொரு விசயம் குறித்தும் சிந்திக்க துவங்கினார் எடிசன். 

எடிசன் அம்மா சொன்ன பொய் [About [Thomas Alva Edison’s Mother]

சில உடல் குறைபாடுகளால் 8 வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார் எடிசன். எடிசன் பின்னாளில்  வருவதற்கு முழு முதற்காரணம் எடிசனின் அம்மா தான் என்றால் மிகை ஆகாது. அவரது அம்மா எப்போதும் சொல்வது ஒரே ஒரு விசயம் தான். “If you learn from your mistakes then you are intelligent. But if you learn from someone’s mistakes, then you are a Genius”. அதாவது, “ஒருவர் அவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொண்டால் அவர் புத்திசாலி. அடுத்தவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொள்பவர் மேதை”. 

ஒருநாள் பள்ளிக்கு சென்றுவிட்டு எடிசன் வீடு திரும்பினார். அப்போது ஆசிரியர் கொடுத்ததாக ஒரு பேப்பரை தனது அம்மாவிடம் கொடுத்தார் எடிசன். அதனை பிரித்துப்பார்த்த எடிசனின் அம்மாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. அவர் தன்னை தேற்றிக்கொண்டு அந்த கடிதத்தை படித்தார் “Your son is a Genius. This school is not the right place for him, and there are no efficient teachers to train him. So, please train him yourself.” அதாவது உங்களது மகன் ஒரு மேதை. அவன் படிப்பதற்கு இது தகுந்த இடம் அல்ல, மேலும் அவனுக்கு சொல்லிக்கொடுக்க கூடிய அளவிற்கு இங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை” என்றார். 

edison and his mother

அதன்பிறகு பள்ளிக்கு செல்வதை எடிசன் நிறுத்திக்கொண்டார். தனது தந்தையின் மூலமாக கிடைத்த புத்தகங்களை வீட்டிலேயே படித்து தனது அறிவை பெருக்கிக்கொண்டார். தனது அம்மா இறந்த பிறகு ஒருமுறை அலமாரியை பார்க்கும் போது தனது இளமைப்பருவத்தில் ஆசிரியர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் உண்மையில் எழுதி இருந்தது இதுதான் “School cannot allow your son to attend classes anymore, he is mentally impaired. He is rusticated.”. அதாவது, உங்களது குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியாக இல்லை ஆகவே அவனை இனிமேல் வகுப்பில் அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது. இதைப்பார்த்து தான் அவரது அம்மா கண்ணீர் வடித்து மாற்றிக்கூறினார். ஒருவேளை இந்தக்கடிதத்தில் இருந்தபடியே அவரது அம்மா படித்திருந்தால் எடிசன் என்ற விஞ்ஞானி அப்போதே முடங்கிப்போயிருப்பார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கம் கொடுக்க இப்படியொரு அம்மா இருந்தால் நிச்சயமாக எந்தவொரு குழந்தையும் மேதை ஆகும்.

தோல்வியைக்கண்டு துவளாதவர் எடிசன் ​[[Thomas Alva Edison’s Will Power]

எந்தவொரு கண்டுபிடிப்பாளருக்கும் தோல்வி ஏற்படவே செய்யும். அதிலிருந்து கற்றுக்கொள்பவர் சாதிக்கிறார். எடிசனும் அவ்வழியே. எடிசன் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அதற்காக எத்தனை முறை தோல்வியை தழுவியிருக்கிறார் என்பதை பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு, மின்விளக்கினை கண்டுபிடித்தாயிற்று, ஆனால் நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது. எந்த பொருளில் செய்தாலும் அது உருகிப்போனது அல்லது துண்டானது. கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, கேட்டால் இதையெல்லாம் நான் தோல்வி என சொல்ல மாட்டேன். 5000 பொருள்களும் இதற்கு பயன்படாது என்பதை நான் கண்டறிந்து இருக்கிறேன் என நம்பிக்கையோடு பேசுவார் எடிசன். இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை கண்டுபிடித்தார். 

தாமஸ் ஆல்வா எடிசன் வெற்றிக்கதை

டிசம்பர் 10,1914 இல் நியூ ஜெர்சியில் இருக்கக்கூடிய வெஸ்ட் ஆரஞ்சு பகுதியில் இருக்கும் எடிசனின் மிகப்பெரிய தொழிற்சாலை தீ விபத்தை சந்தித்தது. 10 மிகப்பெரிய தொழிற்கூடங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி இருந்தது. அந்த தருணத்தில் எடிசன் அமைதியாக ஓரமாக உட்கார்ந்துகொண்டு தனது தொழிற்கூடம் தீயில் எரிவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார். அதோடு நிற்காமல், அருகே இருந்த அவரது மகனை அழைத்து வீட்டில் இருக்கும் உன் அம்மா மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு வா. இனி எப்போதும் அவர்களால் இப்படியொரு தீ விபத்தை பார்க்க முடியாது என்றார். அதிர்ச்சி அடைந்த அவரது மகன் “அப்பா நமது முழு தொழிற்கூடமும் தீயில் இரையாகிக்கொண்டு இருக்கிறது, இப்படி சொல்கிறீர்களே என்றார்”. அதற்கு எடிசன் “ஆமாம் நமது தொழிற்கூடம் தற்போது தீயில் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது. அதோடு சேர்த்து நமது தவறுகளும் சேர்ந்து தான் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது. நாம் நாளை மீண்டும் துவங்குவோம்” என்றார். இதுதான் எடிசன். இதனால் தான் அவரால் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராக உயர முடிந்தது.

எடிசனும் மின்சார விளக்கு கண்டுபிடிப்பும்

எடிசன் என்றால் நம் நினைவுக்கு வரக்கூடிய கண்டுபிடிப்புகளில் முதன்மையானது மின்சார பல்பு. 1870 க்கு முன்னதாக எவரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இனி இரவும் பகல் போல மின்சார விளக்குகளால் மாறப்போகிறது என்று. அப்போது சில அறிவியலாளர்கள் சொன்னதைக்கூட நம்புவதற்கு ஆள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால் எடிசன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மட்டும் அதற்கான முயற்சிகளில் உலகின் பல்வேறு இடங்களிலும் ஈடுபட்டார்கள். 

மின்சார பல்பு கண்டறிவதில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சிக்கல் என்னவெனில் அதில் பயன்படுத்தக்கூடிய மின் இழையானது வெகு விரைவில் உருகி விடுகிறது. இதற்காக எடிசன் பல்வேறு பொருள்களை மின் இழையாக பயன்படுத்திப்பார்த்தார். அப்போதைய காலகட்டத்தில் எடிசன் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் விஞ்ஞானிகள் பல்வேறு பொருள்களை வைத்து சோதனை நடத்திக்கொண்டு இருந்தார். இந்த முயற்சியில் எடிசன் 5000 முறைக்கும் மேல் பரிசோதனையில் ஈடுபட்டார். பிளாட்டினம் பொதுவாக மற்ற பொருள்களைக்கட்டிலும் அதிகமாக வெப்பநிலையை தாங்கும் என அவர் அறிந்திருந்தார். 

ஆனால் அதற்கு பிளாட்டினம் நிறைய தேவைப்பட்டது. அதிக பல்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் அதிகமாகி பிளாட்டினம் தேவையாக இருந்தது. ஆனால் எடிசன் தயங்கவில்லை, உடனடியாக உலகம் முழுமைக்கும் இருக்கக்கூடிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த உலோகம் எங்கிருந்தாலும் கூறுங்கள் என கேட்டு சிறிதளவு பிளாட்டினத்தையும் அதில் சிறிதளவு இணைத்து அனுப்பினார். அதோடு $20,000 பரிசையும் அறிவித்தார் எடிசன். 

இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போதே அவர் இன்னொரு வியாபாரத்தையும் கண்டுபிடித்தார். அவர் மைனிங் வேலையின் போது கிடைக்கக்கூடிய குவியல்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்தார். இதன்மூலமாக $5 செலவில் கிடைக்கக்கூடிய குவியலில் இருந்து $1400 மதிப்பிலான தங்கத்தை பிரித்தெடுத்தார். சிறிது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இது மிகப்பெரிய லாபம் தரும் முறையாக பார்க்கப்பட்டது. எடிசன் பல்புகளுக்கு பிளாட்டினம் பயன்படுத்த துவங்கிய விசயம் வெளியான 5 ஆண்டுகள் கழித்து பிளாட்டினம் விலையில் மிகப்பெரிய ஏற்றம் இருந்தது. 

எடிசனை போன்று மின்சார பல்பு தயாரிப்பில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோசப் ஸ்வான் கூட அதே மாதிரியான ஆய்வில் ஈடுபட்டார். பல சமயங்களில் ஸ்வானின் ஐடியாவைக்கூட பயன்படுத்தி இருக்கிறார். இந்த இருவரின் நிறுவனங்களும் கூட பின்னாளில் இணைந்து செயல்பட்டிருக்கிறது. அந்த இணைவிற்கு பிறகு பாம்பூ பிளைமண்ட் ஆனது செல்லுலோஸ் ஆக மாறியது. 

அதன் பிறகும் கூட எடிசன் தனது ஆய்வினை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருந்தார். ஜனவரி 27,1980ஆம் ஆண்டு அமெரிக்கா அவரது மின்சார பல்புக்கு காப்புரிமையை வழங்கியது. ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட வேண்டுமெனில் அதற்காக கடுமையான உழைப்பு மட்டும் இருந்தால் போதுமானது அல்ல. மிகப்பெரிய பொருள்செலவும் தேவைப்பட்டது. ஆனால் எடிசன் பணம் செலவாவதைப்பற்றி எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. அவர் மிகப்பெரிய வருமானத்தை தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்துகொண்டே இருந்தார். 

10 Inventions By Thomas Alva Edison

1. மின் வாக்கு பதிவு கருவி [Electrographic Vote-recorder]

தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதல் கண்டுபிடிப்பான மின் வாக்கு பதிவு கருவிக்கான காப்புரிமையை தனது 22 ஆம் வயதில் பெற்றார். அதே காலகட்டத்தில் மின் வாக்கு பதிவு கருவியை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்து வந்தார்கள். ஆனால் அவர்களை வென்று முதல் காப்புரிமையை பெற்றார். அப்போதைய காலகட்டங்களில், அமெரிக்க காங்கிரசில் வாக்குப்பதிவு அனைத்தும் குரல் வாக்கெடுப்பு முறையிலேயே இருந்தது. அதற்கு மாற்றாக, மின் வாக்கு பதிவு கருவி கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால், மிக விரைவாகவும் சரியாகவும் வாக்குப்பதிவை பதிவிடும் இந்த மாற்றை அப்போதைய அமெரிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆகவே, அது பயன்பாட்டுக்கு வரவில்லை.

2. யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் [Universal stock ticker]

கோல்ட் அண்ட் ஸ்டாக் டெலிகிராப் நிறுவனத்திற்காக யுனிவர்சல் ஸ்டாக் டிக்கர் என்ற கருவி 1871 இல் உருவாக்கப்பட்டது. எடிசனின் மேம்படுத்தப்பட்ட ஸ்டாக் டிக்கர் மூலமாக பங்குச்சந்தை பரிமாற்ற தகவல் மிக விரைவாக பரிமாறப்பட்டது, அப்போது இது பெரும் புரட்சிகரமாக பார்க்கப்பட்டது. நிகழ்நேர பங்குச் சந்தை பரிமாற்ற தகவல் அனைத்தும் நாடு முழுவதும் உள்ள தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக இயந்திர முறையில் அனுப்பப்பட்டது.

3. செக்ஸ்டுப்ளெக்ஸ் மற்றும் மல்டிபிளக்ஸ் தந்தி [Sextuplex and multiplex telegraph]

1872-76 முதல், எடிசன் மல்டிபிளக்ஸ் தந்தி கண்டுபிடிப்பில் ஈடுபட்டு காப்புரிமை பெற்றார். இதன் மூலமாக ரயில் நிலையங்கள் மற்றும் நகரும் ரயில்களுக்கு இடையே செய்திகளை அனுப்ப முடியும், ஒரே நேரத்தில் ஆறு செய்திகளை இதன் மூலமாக அனுப்ப முடியும். இது வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு வயரிங் செய்திட வேண்டிய தேவையை குறைத்து மில்லியன் கணக்கான டாலர்களை மிச்சப்படுத்தியது. 1837 ஆம் ஆண்டு சாமுவேல் மோர்ஸால் கண்டுபிடிக்கப்பட்ட தந்தியில் எடிசன் பல மேம்பாடுகளை செய்து புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அதிலே இரண்டு தான் இவை. மொத்தமாக 200 காப்புரிமைகளை தந்தி அமைப்பில் மேற்கொண்ட மேம்பாடுகள் மூலமாக எடிசன் பெற்றார்.

4. கார்பன் ஒலிவாங்கி [Carbon microphone]

கார்பன் ஒலிவாங்கி என்பது தொலைபேசியின் உள்ளே ஒலியை மின் ஒலி சமிக்ஞையாக மாற்றும் ஒரு சாதனம். எடிசன் இந்த கண்டுபிடிப்பிற்க்காக காப்புரிமை கோரி 1876 இல் விண்ணப்பித்தார். ஆனால் பலர் அவருக்கு முன்பே அதை கண்டுபிடித்ததாகக் கூறி காப்புரிமை கோரினார்கள். பிறகு வழக்குகள் நடைபெற்று 1892 இல் நீதிமன்றம் எடிசனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

5. ஃபோனோகிராஃப் [Phonograph]

1877ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒலிப்பதிவு சாதனம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. தனது குரலை பதிவு செய்திட விரும்புகிறவர் ஒரு ஊதுகுழாயில் பேச வேண்டும். ஒரு பதிவு ஊசி பின்னர் ஒரு உலோக உருளை மீது ஒலி அதிர்வுகளை பதிவு செய்யும். அந்த உருளையில் ஒரு தகர படலம் சுற்றப்பட்டு இருக்கும். எடிசன் பதிவு செய்த வாக்கியம் “Mary had a little lamb.” என்பது தான்.

6. ஒளிரும் விளக்கு [Incandescent light bulb]

எடிசன் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருந்தாலும் அவர் கண்டுபிடித்த ஒளிரும் மின்விளக்கு தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இதனை எடிசன் 1879 இல் கண்டுபிடித்தார். 1802 ஆம் ஆண்டில் ஹம்ப்ரி டேவி என்பவர் முதன் முதலாக மின்சார பல்பினை கண்டறிந்தாலும் கூட அது நீடித்து எரியும் தன்மை கொண்டிருக்கவில்லை. ஆகவே அதனை யாரும் பயன்படுத்த நினைக்கவில்லை. எடிசன் தான் தனது கடுமையான கண்டுபிடிப்பின் பலனாக 1200 மணி நேரத்திற்கும் அதிகமாக எரியக்கூடிய மின்சார விளக்கினை கண்டுபிடித்தார். தற்போது அவர் கண்டுபிடித்த மின்சார விளக்கினால் தான் மனிதர்கள் பயன்படுத்தி வந்த மெழுகுவர்த்தி விளக்குகள், மற்ற விளக்குகள் அனைத்திற்குமான மாற்று கிடைத்தது.

7. மின்சார விநியோக முறை [Electricity distribution system]

எது தேவையென அறிந்து அதனை கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவது தான் எடிசன் வழக்கம். மின்விளக்கு கண்டுபிடித்தவுடன் அதனை பயன்படுத்த தேவையான மின்சாரத்தை வீடுகளுக்கு பகிர்ந்து அளிக்கும் முழு மின் அமைப்பை உருவாக்க வேண்டும் என எடிசன் நினைத்தார். 1882 ஆம் ஆண்டில் அவர் நேரடி மின்னோட்டத்தை (DC) அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பைக் கண்டுபிடித்தார், அதில் ஒரு மின்சாரம் ஒரு திசையில் மட்டுமே பாயும்.

1886 ஆம் ஆண்டில், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸின் AC அடிப்படையிலான மின் அமைப்பு முறை எடிசனின் DC அமைப்பிற்கு போட்டியாக மாறியது. AC மின் அமைப்பு நீண்ட தூரத்திற்கு மின்சாரத்தை கடத்த உகந்ததாக இருந்தது. பல நன்மைகள் AC யில் இருப்பதனால் AC மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான சரியான அமைப்பாக மாறியது. தற்போது இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க பயன்படுகிறது, அதே நேரத்தில் டிசி பொதுவாக பேட்டரி மூலம் இயங்கும் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற குறைந்த மின்னழுத்த பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

8. மின்சாரத்தை அளவிடும் மீட்டர் [The Electric Power Meter]

மின்சாரத்தை வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பும் போது அதனை அளவிடுவது அவசியமானது. அப்போது தான் எவ்வளவு பயன்படுத்தி இருக்கிறார்களோ அதற்கு ஏற்றாற்போல போல கட்டணங்கள் விதிக்க முடியும். ஆகவே மின்சாரத்தை அளவிடும் மீட்டர் ஒன்றினை கண்டுபிடித்தார் எடிசன். அவர் கண்டறிந்த Webermeter கருவிக்கு 1881 இல் காப்புரிமை வாங்கினார்.

9. எலக்ட்ரிக் கார்களுக்கான அல்கலைன் பேட்டரி [Alkaline Battery for Electric Cars]

எடிசன் மின்சாரம் மூலம் கார்களை இயக்க முடியும் என்று நம்பினார். அவர் நம்பியது இப்போது தான் மெல்ல நடந்துகொண்டு வருகிறது. ஆனால் இதனை அப்போதே செய்து காட்டியவர் எடிசன். 1899 ஆம் ஆண்டில் அவர் ஒரு அல்கலைன் பேட்டரியை உருவாக்கத் தொடங்கினார். 1900 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 4,000க்கும் மேற்பட்ட கார்கள் மின்சாரத்தில் இயங்கியது. ரீசார்ஜ் செய்யாமல் 100 மைல்கள் (161 கிலோமீட்டர்) இயங்கும் பேட்டரியை உருவாக்குவதே அவரது குறிக்கோளாக இருந்தது. எடிசன் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால் எடிசனின் பணி வீண் போகவில்லை — பேட்டரிகள் அவரது மிகவும் இலாபகரமான கண்டுபிடிப்பாக மாறியது. அவரது நண்பர் ஹென்றி ஃபோர்டும் எடிசனின் பேட்டரிகளை தனது மாடல் டிஎஸ்ஸில் பயன்படுத்தினார்.

10. ஃப்ளோரோஸ்கோப் [fluoroscope]

1895 இல் வில்ஹெல்ம் ரோன்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்த பிறகு, எடிசன் அவற்றைப் பரிசோதிக்கும் வேலைக்குச் சென்றார். 1896 ஆம் ஆண்டில் அவர் ஒரு மருத்துவ ஃப்ளோரோஸ்கோபிக் சாதனத்தை உருவாக்கினார், இது ஒரு பொருளின் உட்புறத்தில் நகரும் படங்களைப் பெறுவதற்கு X-கதிர்களை பயன்படுத்த உதவியது.

11. இரும்பை பிரித்தெடுக்கும் முறை [Magnetic Iron Ore Separator]

1880 மற்றும் 1890 களில் தாதுப்பொருள்களில் இருந்து காந்தம் மூலமாக இரும்பை பிரித்தெடுக்கும் முறையை எடிசன் கண்டறிந்தார். இதனை அடுத்து அவர் பெருமளவு முதலீட்டில் பல சுரங்கங்களை வாங்கினார். ஆனால், அது பெரிதும் லாபம் தரவில்லை. ஆகவே அதனைவிட்டு வெளியேறினார். ஆனால் அங்கே அவர் கற்றுக்கொண்ட பாடம் பின்னாட்களில் அவர் சிமெண்ட் தொழிற்சாலை உருவாக்கும் போது பெரிதும் பயன்பட்டது. 

“வெற்றி பெறுகிற போது உற்சாகமாக இருப்பது சிறப்பல்ல. தோல்வி அடையும் போது வெற்றிபெற உற்சாகத்தோடு தொடர்ந்து உழைப்பது தான் சிறப்பு” – எடிசன்

எடிசன் மிகப்பெரிய சாதனையாளராக உருவானதற்கு அவரது அம்மாவும் அவரது கடின உழைப்பும் தான் உண்மையான காரணம். கடுமையாக உழைத்தால் எவராலும் வெற்றியாளராக வர முடியும் என்பது தான் எடிசன் ஒவ்வொரு முறையும் எடிசன் கூறிக்கொண்டே இருக்கும் உண்மை.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec25

உலகின் மிகவும் குட்டையான பெண்ணான ஜோதி அம் தனது 30வது பிறந்தநாளை ...

Dec25

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்தி...

Dec28

நடிகர் விஜயகாந்த் 

ஹெலன் கெல்லர் (Helen A...

Jan04

APJ அப்துல் கலாம் – Abdul kalam histo...

Dec28

மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ ...

Jan03

Jan05
Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:23 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:23 am )
Testing centres