Back
  • All News
  • கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி ம...
கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் இன்று  திறந்து வைக்கப்பட்டது..!
Jan 06
கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக தொகுதி மட்டக்களப்பில் இன்று திறந்து வைக்கப்பட்டது..!



கிழக்கு மாகாணத்திற்கான அஞ்சல் நிர்வாக கட்டிட தொகுதியானது மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த  கட்டிட தொகுதியானது இன்று(06.01.2024) போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டள்ளது.

அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மாகாண பிரதி அஞ்சல் மாஅதிபர் முகமத் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் சிவனேசன்,  இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன, இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, மாவட்ட அரசாங்க அதிபர்  ஜெ முரளிதரன் மற்றும் மத குருமார்கள் அரசாங்கத் திணைகள் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் பிரசன்னமாகி இருந்தனர்.

இந்தப் புதிய அஞ்சல் கட்டிட தொகுதியில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் அதிபரின் அலுவலகம், வாகன நிர்வாக கணக்கீட்டு பகுதி,  மாகாண அஞ்சல் பயிற்சி நிலையம்,  மட்டக்களப்பு மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் என்பனவும் அமையப்பெற்றுள்ளன.

அத்துடன் இக்கட்டிடத்தொகுதிக்காக 480மில்லியன் ரூபா தபால் திணைக்களத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov04

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெ...

Dec23

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளை...

Dec16

மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முற...

Nov10

கற்பிட்டி - இரம தீவு பகுதியில்  5 இலட்சத்து 70 ஆயிரம் Prega...

Jan01

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தா...

Jan06

கிழக்கு மாகாணத்திற்கான அஞ்ச...

Dec29

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ...

Feb24

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்படட வாகனேரி ப...

Jan13

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்...

Dec25

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகு...

Dec15

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவி கர...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:26 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:26 am )
Testing centres