எம்மவர் விளையாட்டு

  • All News
  • விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020 டைமன் வசம்
  விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020  டைமன் வசம்
Feb 04
விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020 டைமன் வசம்

குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020 இறுதிப்போட்டியில் வதிரி டைமன் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று இந்த வருடத்துக்கான விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணத்தையும் 50 ஆயிரம் ரூபா பணப் பரிசையும் பெற்றுக்கொண்டது.
விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020 இறுதிப் போட்டியில் குப்பிழான் வலிகாமம் லீக் அணியான குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வடமராட்சி லீக் அணியான வதிரி டைமன் விளையாட்டுக் கழக அணி மோதியது. 4:1 என்ற கோல் கணக்கில் வதிரி டைமன் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது.
குப்பிழானிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்திய 11 வீரர்கள் கொண்ட விக்னேஸ்வரா வெற்றிக் கிண்ணம்-2020 மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் குப்பிழான் விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத் தலைவரும், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான த. கணேசநாதன் தலைமையில் நடைபெற்றது.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • Share News