*இந்தப் பண்டிகை காலத்தை இன்னும் இனிமையாக மாற்றிக்கொள்ள ரோஸ் மில்க் பால்கோவாவை இன்றே தயார் செய்து உண்ணுங்கள்.
*தேவையான பொருட்கள்.
*நெய் – ஒரு ஸ்பூன்
*பால் – ஒரு லிட்டர்
*பால் பவுடர் – 2 ஸ்பூன்
*சர்க்கரை – 1/2 கப்பு
*ரோஸ் மில்க் சிரப் – 2 ஸ்பூன்
*செய்முறை
முதலில் ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கடாய் நன்றாக சூடானதும் அதில் நெய்யை சேர்க்க வேண்டும். நெய் உருகியதும் அதில் பாலை ஊற்ற வேண்டும். பால் பொங்கி கொதிக்க ஆரம்பித்த பிறகு அதில் பால் பவுடரை சேர்க்க வேண்டும். கட்டி விழுகாத அளவிற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அது கெட்டியான பதத்தை அடைந்த பிறகு அதில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு அதில் ரோஸ் மில்க் சிரப்பை சேர்க்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வந்த பிறகு அதை ஒரு பாக்சில் வைத்து ஆறவிட வேண்டும்.
ஆரிய பிறகு அந்த பாக்ஸில் இருந்து வெளியே எடுத்து நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நறுக்கி பரிமாறலாம். மிகவும் எளிமையாக அதே சமயம் சுவையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கக்கூடிய ரோஸ் மில்க் பால்கோவா தயாராகிவிட்டது. விருப்பப்படுபவர்கள் இதில் ஏலக்காய், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்வீட் எடு கொண்டாடு.