Back
 • All News
 • இன்றைய ராசிபலன் – 29 டிசம்பர் 2023
இன்றைய ராசிபலன் – 29 டிசம்பர் 2023
Dec 29
இன்றைய ராசிபலன் – 29 டிசம்பர் 2023மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். ஆகவே சந்தோஷம் வந்தாலும் அமைதியாக இருக்கணும். ஏதாவது பிரச்சனை வந்தாலும் அமைதியாக இருக்கணும். அதுவே தானா சரியாகிவிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்தோடு இருங்கள். சொத்து பிரச்சனை ஏதாவது இருந்தால் அதில் இன்று தலையிட வேண்டாம். முக்கியமான வேலைகளை நாளை தள்ளிப் போடவும்.

ரிஷபம் 

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசை நிறைவேறும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறி வந்து நல்லா பழகுவாங்க. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். ஏதோ பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்வீர்கள்.

மிதுனம் 

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எல்லா விஷயத்திற்கும் தயாராக இருங்கள். உங்க மனதிற்கு பிடித்தவர்கள் உங்களை காயப்படுத்தி விடுவார்கள். கொஞ்சம் மனசு கஷ்டப்படும். ஆனாலும் கவலைப்படக்கூடாது. பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கு உண்டான வழியை தேட வேண்டும். நேர்மையோடு நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களிடம் பொய் சொல்லாதீர்கள். அரசுக்கு புறம்பான எந்த வேலையும் செய்யாதீங்க.

கடகம் 

கடக ராசிக்காரர்கள் இன்று முன்கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். உறவுகளிடம் பேசும் போது கவனத்தோடு இருக்க வேண்டும். வார்த்தைகளை விடக் கூடாது. மேலதிகாரிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தலைவலி வரும். எந்த வேலையை செய்வது என்று  உங்களுக்கு புரியாது. உங்கள் பிரச்சினையை அடுத்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் கொஞ்சம் உணர்ச்சி வசப்படுவீங்க பாத்துக்கோங்க.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பெரியவர்களின் பேச்சை கேட்கவும். தெரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். புது மனிதர்களின் பேச்சை நம்ப வேண்டாம். முக்கியமான முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். பேராசை பட்டு எந்த ஒரு விஷயத்திலும் கையெழுத்து போட்டுடாதீங்க. உங்களை இன்று யாராவது ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. கன்னி

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் கூட சந்தோஷத்தோடு இன்று கல்லா கட்டுவீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுக்க வேண்டும் என்றாலும், அந்த தொகையை வட்டியோடு திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். புதுசாக வண்டி வாகனம் நகை வாங்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

துலாம் 

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நபரின் சந்திப்பு உங்களுக்கு லாபத்தை கொடுக்கும். வேலையில் எதிர்பாராத நல்லது நடக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வை பற்றி மேல் அதிகாரிகளிடம் பேசலாம். உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும். வெளிநாட்டு பயணம் நன்மையை கொடுக்கும்.

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்று சிந்தனை நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு யோசனை மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் வேலையில் ஆர்வம் குறையும். அதனால் தேவையற்ற சிந்தனையை ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் அக்கறை காட்ட பாருங்கள். இல்லை என்றால் செய்யும் வேலையில் சிக்கல்கள் வந்துவிடும். பிறகு மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை மனதை ஒருநிலைப்படுத்தி கோங்க இன்னைக்கு

தனுசு 

தனுசு ராசிக்காரர்கள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. யாருக்கும் போய் முன் நின்று பஞ்சாயத்து செய்யக்கூடாது. வாயை மூடிக்கொண்டு உங்கள் வேலையை நீங்கள் பார்த்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உங்கள் வாயால் உங்களுக்கு பிரச்சனைகள் வரும். ஜாக்கிரதை அனாவசியமாக எந்த இடத்திலும் பேசாதீங்க, கூடுமானவரை இன்று மௌன விரதத்தில் இருப்பது நல்லது. யார் என்ன கேள்வி கேட்டாலும் தலையை ஆட்டி பதில் சொல்லுங்கள் தப்பிச்சிடுவீங்க.

மகரம் 

மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி வெற்றி வாய்ப்புகள் வரும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு புது வேலையை தொடங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். மாமனார் வழி உறவினால் ஆதாயம் கிட்டும். விவசாய தொழில் முன்னேற்றம் தரும். சில பேருக்கு நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் உண்டாகும். பயணத்தின் போது உங்களுடைய உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது.

கும்பம்
 
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். சில விஷயங்களில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது. கணவன் மனைவிக்குள் சண்டை வரும். இதனால் மன நிம்மதியை இழக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று வாழ்க்கைத் துணை இடம் அட்ஜஸ் செய்து நடந்து கொள்ளவும் தெரிய வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் பிரஷர் இருக்கும். சில பேருக்கு டார்கெட்டை முடிக்க முடியாமல் கஷ்டபட வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுவார்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.  

 

                  இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையவேண்டும்.

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:27 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:27 am )
Testing centres