Back
 • All News
 • ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞன் பலி!
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞன் பலி!
Mar 11
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த இளைஞன் பலி!40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த அடையாளம் தெரியாத இளைஞன், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம்  நேற்று  (10) காலையில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் குறித்து  மேலும் தெரியவருவதாவது,

தலைநகர் டெல்லியில் உள்ள கேஷோப்பூர் மந்தி பகுதியில் டெல்லி நீர்வளத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 40 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது.  அதிகாரிகள் முறையாக மூடாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று  அதிகாலை ஒரு மணி அளவில் இந்த ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை ஒன்று தவறி விழுந்து விட்டதாக மீட்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது 

மீட்பு படையினர், உடனடியாக மீட்பு பணிகளை துவக்கினர். அப்போது ஆழ்துளை கிணற்றில் விழுந்தது குழந்தை அல்ல என்பதும், அது இளைஞன் என்பதும் தெரியவந்துள்ளது 

இதனிடையே சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அந்த வாலிபரை உயிருடன் மீட்க முயற்சி செய்தனர்.

பக்கவாட்டில் குழி ஒன்று தோண்டப்பட்டு அந்த வாலிபரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் மதியம் 3:30 மணி அளவில் குறித்த இளைஞன் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார்.

 ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது 

இதனிடையே அந்த இளைஞன் யார், எப்படி இங்கு வந்து தவறி விழுந்தார் என்பது தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 திருடுவதற்காக அலுவலகத்துக்குள் நுழைந்த அந்த நபர், ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov24

உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கட...

Jan10

காசாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது படையினர் ...

Dec09

ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியி...

Jan13

உலகத்தின் முடிவு தொடர்பிலான புதிய ஆய்வு முடிவுகள் வெளியா...

Feb05

சிலி நாட்டில்  காட்டுத் தீ ஏற்பட்ட காரணத்தால்  ...

Dec17

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பய...

Dec16

இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸை குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போர...

Dec24

மாதவிடாய் வலியை குறைப்பதற்கு நண்பர்கள் பேச்சை கேட்டு கருத்தடை மா...

Jan05

எதிரான மொஸ்கோவின் போரில் பயன்படுத்துவதற்காக வடகொரியா சமீபத்தில் ...

Dec29

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோ தாக்குதல...

Dec28

நியூசிலாந்தின் வெலிங்டனுக்க...

Nov02

தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்தி...

Jan16

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பக...

Jan05

கனடாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சிறுவன் ஒருவன் சக பயணியை...

Nov29

இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதே...

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:41 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:41 am )
Testing centres