இந்தியா

 • All News
 • இந்தியாவிற்குள் நுழைய பிரிட்டன் எம்.பி.,க்கு மறுப்பு
 இந்தியாவிற்குள் நுழைய பிரிட்டன் எம்.பி.,க்கு மறுப்பு
Feb 18
இந்தியாவிற்குள் நுழைய பிரிட்டன் எம்.பி.,க்கு மறுப்பு
மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த பிரிட்டன் எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், துபாயில் இருந்து நேற்று இந்தியாவுக்கு வந்தார். எனினும், விமான நிலையத்தில், அவரிடம் முறையான, 'விசா' இல்லை எனக் கூறிய அதிகாரிகள், அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பினர்.

மத்திய அரசு, கடந்த ஆண்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி எம்.பி., டெபி ஆப்ரகாம்ஸ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரிட்டன் பார்லிமென்டில், காஷ்மீர் விவகார ஆலோசனை குழு தலைவராக இருக்கும் அவர், மத்திய பா.ஜ., அரசின் கொள்கைகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்றுக் காலை துபாயில் இருந்து, டில்லி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆப்ரகாம்சை அனுமதிக்க மறுத்த அதிகாரிகள், அவரின், 'இ-விசா' ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அவர் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து, ஆப்ரகாம்ஸ் கூறியதாவது:
டில்லி விமான நிலையத்தில், குடிவரவு அதிகாரிகளிடம், ஈ-விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தேன். அதை சரிபார்த்த அதிகாரி, இ-விசா, ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறினார். ஆனால், அது, அக்டோபர் வரை செல்லுபடியாகும். அதை ஏற்க மறுத்த அவர்கள், என்னை துபாய்க்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Sep22

கன்னியாகுமரியிலிருந்து செல்லக்கூடிய நாடாளுமன்ற உறுப

Sep03

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணி

Sep11

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிரா

Aug21

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோர

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

Sep19

அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக நாடுகளில

Sep15

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பல்லவநாயக்கன்பட்

Aug14

'அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்' என, அ.தி.

Sep17

லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக்கரைப் பகுதியில

Sep15

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார ச

Feb05

10 கோடி ரூபா அபராத தொகையை செலுத்தாவிட்டால், சசிகலா கூடுத

May22

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவ

Sep15

புதுச்சேரியில் இருக்கும் அண்ணா சிலைக்கு முதல்வர் நார

Aug24

அசாமில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:59 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:59 pm )
Testing centres