இந்தியா

  • All News
  • 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான சலுகைகள் வழங்கப்படவேண்டும்’’
 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான சலுகைகள் வழங்கப்படவேண்டும்’’
May 19
10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான சலுகைகள் வழங்கப்படவேண்டும்’’

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும், 10 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான சலுகைகள் வழங்கப்படவேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை சீரமைக்கும் வகையில் மத்திய அரசு 20 லட்சம் கோடி அளவுக்கு பொருளாதார சலுகை ஊக்குவிப்பு அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது. இது வெறும் 1.86 லட்சம் கோடி மதிப்புடையது என குற்றம்சாட்டி காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:  



மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சலுகை ஊக்குவிப்பு அறிவிப்பில் ஏழைகள், புலம்பெயர்ந்தவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் சிறு கடைக்காரர்கள் உள்ளிட்டோருக்கு எந்த  சலுகையும் கிடைக்கவில்லை. மக்களை ஏமாற்றமடைய செய்யும்வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த பொருளாதார சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்.  இந்த சலுகை அறிவிப்பு 10 லட்சம் கோடி அளவுக்கு கூடுதல் செலவு கொண்டதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கு இணையானதாகவும் இருக்கவேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் மத்திய அரசு இதை அறிவித்துள்ளதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. இந்த சலுகைகள் தொடர்பாக நாடாளுமன்ற குழுவாவது விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



நம்பரை நல்லா ஞாபகத்துல வச்சிக்கோங்கோ மக்களே...

ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பிரதமரும், நிதியமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்பு சலுகையின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல. வெறும் 1,86,650 கோடி தான். இந்த எண்ணை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், இன்னும் சில மாதங்களில் இது தொடர்பாக உண்மை தெரிந்துவிடும்’’ என குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

நீட் தேர்வு அச்சத்தினால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Sep14

“தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற முழக்கத்தோ

Sep09

பா.ஜ.கவின் ராஜ்யசபா எம்.பியாக இருப்பவர் சுப்ரமணிய சுவா

Sep04

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பக்கமாக இருக்கு

Sep01

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச்

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Aug17

ஆண்டி என்றாலும் ஓகே தான்... அதிபர் என்றாலும் ஓகே த

Jun08

தமிழகத்தில் மேலும் 1562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய

Sep07

சிவகங்கை  மாவட்டத்தில் அம்மா  பேரவை சார்பில் உறுப்

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

Sep19

பாராளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய அரசு அறிவித்த வி

May23

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளைய

Feb03

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான க

Sep19

திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை எ

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:13 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:13 pm )
Testing centres