இந்தியா

 • All News
 • ரேஷன் அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வீதம் 13 1/2 கோடி முக கவசங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 ரேஷன் அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வீதம் 13 1/2 கோடி முக கவசங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
Jun 11
ரேஷன் அட்டைதாரர் ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசம் வீதம் 13 1/2 கோடி முக கவசங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு தமிழக அரசு அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் விலையில்லாத துணியிலான முககவசங்களை வாங்கி வழங்குவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதை கணக்கிடும்போது, தலா ஒருவருக்கு 2 தரமான மறுபடியும் உபயோகிக்கத்தக்கதான 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 துணி முககவசங்கள் வாங்கப்பட வேண்டும்.அவசர காலத்தில் பாதுகாப்பு உபகரணமாக இதை கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. எனவே அவசர கொள்முதலை மேற்கொள்ளலாம். இந்த கொள்முதலுக்கான விலைப்புள்ளியை மதிப்பிடுவதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசை வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தை பெறுவதில் வெற்றி பெறும் ஏலதாரருக்கு அதற்கான ஒப்பந்தத்தை அரசு வழங்கலாம் என்று கூறியுள்ளார்.அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு விலை நிர்ணயக் குழுவை அமைத்து அரசு உத்தரவிடுகிறது. இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் செயல்படுவார். இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள்.மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய முகக்கவசத்தின் தரம் மற்றும் வகை பற்றி இந்த குழு முடிவு செய்யும். இதற்கான விலையை திருப்திகரமாக இந்தக் குழு நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த விலை மற்றும் ஏலத்தில் வெற்றி பெற்றவரை முடிவு செய்து அரசுக்கு தகுந்த பரிந்துரையை இந்தக் குழு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


வரவிருக்கும் நிகழ்வுகள்
May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

Jun05

தமிழகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற ம

Feb08

பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 50

May22

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்க

Jun12

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்

May29

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இ

May26

சென்னை, 

 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் ப

Dec21

நாட்டின் பொருளாதாரம் தொடா் சுணக்க நிலையிலிருந்து விரை

Apr27

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது ம

Apr30

ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

May16

கன்னியாகுமரிக மாவட்ட அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க

Jan10

மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்த

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jun02

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:41 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:41 am )
Testing centres