லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்துள்ளார்.
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் திகதி தமிழகம் உள்பட உலகம் முழுவதும் வெளியானது. முதல் நாளே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் காட்சியை தமிழ் திரை உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் பார்த்து தங்களுடைய பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில் விஜய், சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் கடந்த 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முதல் நாள் முதல் காட்சியை பார்த்து இருக்கிறார். மேலும் இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் வைரலாகி வருகிறது.