கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலை, கானத்துாரில் ‘சுகுணா கார்டன்’ என்ற பண்ணை வீட்டில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கு விதியை மீறி பார்ட்டி நடைபெற்றுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இளம்பெண்களுடன் மதுபோதையில் ஆடியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீஜித்குமார் ஆகியோர் மது விருந்தும், ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இவர்கள் சினிமா ஷூட்டிங் நடத்தும் பண்ணை வீட்டை, ரூ.15 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து மது விருந்து நடத்தியதுடன், 10 பெண்களை ஆபாச நடனம் ஆடவும் அழைத்து வந்துள்ளனர். இதற்காக தலா ரூ.5,000 வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி பார்ட்டி நடத்திய நடிகை கவிதா ஸ்ரீ உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகு இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட் தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடை காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்
