இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அமெரிக்க சுற்று பயணத்தை தொடர்ந்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடியின் செயலை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் 'நாளைய புகைப்படம்' எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.
புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதே புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை செப்டம்பர் 26 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார்.
இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் இணைய விஷமிகளால் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது.

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான திரவ மருத்து
பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
தமிழக முதல்வர்
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச பருவநிலை மாற்றம் நாட்டின் கடல்சார் சூழலியல் அமைப்புக இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள
