நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் அங்கு சென்று மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜியின் ஒவ்வொரு புகைப்படங்களையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு கவிஞர் வைரமுத்துவும், பிரபுவும் புகைப்படங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., மயிலை வேலு எம்.எல்.ஏ., சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஏராளமான நடிகர், நடிகைகள் சிவாஜியின் மணிமண்டபத்துக்கு வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28-ந்தேதி மாலை சென்னை ஆழ்வார்ப மத்திய அரசால் நடத்தப்படும் தீர்வுகள் குறித்தும் அதை ம மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள
