தேசிய தந்தை மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
பிறந்த நாளையொட்டி மகாத்மா காந்தியின் பஜனை பாடல்கள் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மகாத்மா காந்தி பிறந்தநாளை யொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில், “மகாத்மா காந்தியின் போராட்டங்கள், தியாகங்களை இந்தியர்கள் அனைவரும் நினைவு கூரும் நாளாகும். அவருடைய போதனைக்களை கடைப்பிடிக்க வேண்டும். காந்தியின் கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “தேச தந்தையின் பிறந்தநாளில் நான் தலைவணங்குகிறேன். அவருடைய வாழ்க்கை, தத்துவங்கள், இந்திய மக்களின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகத்தை ஏற்படுகிறது. அவருடைய கொள்கைகள் உலக அளவில் பல லட்ச மக்களுக்கு வலிமை கொடுக்கிறது” என்று கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை கà
பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு à இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த௠கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாà தேசிய கல்விக்கொள்கையில் 2019-ம் ஆண்டு பல்வேறு திருத்தங்à® இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமà® தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்à® சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரதà¯
