ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றில் நுழைந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.

2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
இங்கிலாந்து 20க்கு20 அணியில் இருந்து நீக்கப்பட்ட ஜோ ரூட
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இரண
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
இந்திய வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி,இந்திய அணியுடனா
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
