ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதலை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியம் தொடர்ந்து வருகிறது.
அந்தவகையில் நேற்றும் அங்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
பீகாரை சேர்ந்த அரவிந்த் குமார், உத்தர பிரதேசத்தை சேர்ந்த சாகிர் அகமது ஆகியோரை நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்றனர். இந்த படுகொலைகளுக்கு உமர் அப்துல்லா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி. நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் சமீபகாலமாக நடந்து வரும் அப்பாவி மக்கள் கொலைகள் துரதிருஷ்டவசமானவை. ஒரு சதித்திட்டத்தின் கீழ் இவை நடந்து வருகின்றன. இவற்றில் காஷ்மீரிகள் சம்பந்தப்படவில்லை. ஆனால் அவர்களை இழிவுபடுத்த இவை செய்யப்படுகின்றன. அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நட்புறவை உருவாக்க எடுக்கப்படும் எந்த முயற்சியும் வரவேற்கத்தக்கது. அதன்மூலம் நாங்கள் அமைதியாக வாழ்வதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே இந்தியாவில
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை இந்தியாவில்
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை மு தே.மு.தி.க. தலைவர்
சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்
