கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
அண்மையில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் பட சாதனையை முறியடித்துள்ளது டாக்டர். இந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாஸ்டர் இருந்து வந்த நிலையில், தற்போது டாக்டர் படம் அதனை முறியடித்து உள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் டாக்டர் திரைப்படம் 4 லட்சத்து 40 ஆயிரம் டாலர் வசூலித்துள்ளது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 4 லட்சத்து 39 ஆயிரம் டாலர் வசூலித்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூ
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்(வயது61) செ நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகா நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்