மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந்தேதி டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுக்கு பின் கவர்னர் ஆர்.என்.ரவியை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் சட்டமசோதா தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13-ந்தேதி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் 13-ந்தேதி நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இந்த சூழலில் நேற்று மாலை 5.15 மணிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லிக்கு திடீர் விஜயமாக விமானத்தில் புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது தமிழக நிலவரங்கள் குறித்தும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பிரதமரிடம் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2 அல்லது 3 நாள் டெல்லியில் தங்கி இருந்து விட்டு சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்தியாவில்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கà® நாடு முழுவதும்
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது à தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண௠மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருபà தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடை சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ௠இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில௠உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாà இந்தியாவில் 82.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுதà இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருà பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
