திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அனுராக் தாக்கூர், முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்றவர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இ
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியம
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு
அஜித்தின் வலிமை படம் இன்று ரிலீஸ், காலை முதலே சினிமா ரச
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்ட
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா, அருள்நீதி, மஞ்
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவா
