தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான செய்தி. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ந
தமிழ் சினிமாவின் உச்ச ந
வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வரு
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்
தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுக
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந