முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜி-20 மாநாட்டிற்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு கூறியிருப்பதாவது:-
இந்தியா எப்போதுமே திறமையாகவும், உணர்திறன் கொண்டதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். அவர் எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.
இன்று அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் பல சகாப்தங்களாக உள்ள பழமையான தேவையற்ற சட்டங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.
நிலம், நீர், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மற்றும் உறுதிப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது.
ஒரே பாரத், சிறந்த இந்தியா என்பதற்காக தனது உயிரைக் கொடுத்த சர்தார் பட்டேலுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. பட்டேல், வரலாற்றில் மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

கொரோனாவைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அட
பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி
த.மா.கா.வில் இருந்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்ட
தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை ந
