இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்துக்கு இதன்போது பிரான்ஸ் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும், அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்துள்ளார்.
இதன்மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடிப் பங்களிப்பை வழங்கும் என்று பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிறி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்றவ
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நான்கு வான் கதவுகள் தி
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
இம்மாதம் கடந்த 15 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்ற
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த
