ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது வலையொளி அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை காவல்துறை விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும
மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
யாழில் 7251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் காவல்துறையினரால் முன்ன
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற
வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒரு
எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி நடத்தப்படவிருந்த 2022ம் ஆண
