அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5ம் தேதி இரவு பிரபல ராப் பாடகர் டிராவிஸ் காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இசை நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். டிராவிஸ் ஸ்காட் பாடும்போது, மேடை நோக்கி வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இதனால், ரசிகர்களிடையே பீதி ஏற்பட, முண்டியடித்து வெளியேற முற்பட்டனர். இதனால் நெரிசல் மேலும் அதிகரித்து பலர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக ராப் பாடகர்கள் டிராவிஸ் ஸ்காட், டிரேக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த கிறிஸ்டியன் பாரடேஸ் என்ற வாலிபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹூஸ்டன் ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
இதேபோல் டிராவிஸ் ஸ்காட் மற்றும் அஸ்ட்ரோவேல்டு நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாக மூத்த வழக்கறிஞர் பென் கிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென்கிழக்குப் பகுதியான
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம
உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்க
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய மகள்,உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ
