மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான கஞ்சூர்மார்கில் சாம்சங் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த மையத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் பரவ, அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நான்கு தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டனர்.
அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆ
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவி
கேரளாவில் கொரோனா பரவல் விகிதம் படிப்படியாக குறைந்து வ
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்