உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளம் உடையது. லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731-ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கு தொடங்கி உத்தர பிரதேசம் - பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.
இது 6 வழிச்சாலையாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் இந்த நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர பிரதேசம் செல்கிறார். அங்கு பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைக்கிறார். அவர் இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த சாலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.
புதிதாக கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் 3.2 கி.மீ நீளத்துக்கு விமானங்கள் தரையிறங்கும் வண்ணம் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் இந்த ஓடுபாதையைப் பயன்படுத்தி விமானங்கள் தரையிறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது ஒரு சிறப்பு நாள். பூர்வாஞ்சல் விரைவு சாலை பிற்பகல் 1:30 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. இத்திட்டம் உத்தர பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல நன்மைகளைக் கொண்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினரà
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் தà¯
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் நà®
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமுà®
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் சார்பில் பெட்ரோல்-டீசà
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அ
துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி
சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக à®
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருà®
கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்தà®
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தாலà
