சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, ஜனநாயகம் என்பது இந்தியாவின் இயல்பு மற்றும் அதன் இயல்பான போக்கு ஆகும்.
நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நாம் தனிச்சிறப்புடன் கூடிய இலக்குகளை அடைய வேண்டும். ஒவ்வொருவரும் முயற்சி செய்தால் மட்டுமே இது நிறைவேறும். ஜனநாயகத்தில் அனைவரின் முயற்சிகளைப் பற்றி நாம் பேசும்போது, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பில், அனைத்து மாநிலங்களின் பங்கும் அதன் முக்கிய அடித்தளமாகும்.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வடகிழக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கட்டும் அல்லது பல தசாப்தங்களாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதாக இருக்கட்டும் ... கடந்த சில ஆண்டுகளில் அனைவரின் முயற்சியால் எண்ணற்ற பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு மிகப்பெரிய உதாரணம் கொரோனா.
அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு எதிரான போரை ஒற்றுமையாக நடத்தியது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இன்று இந்தியா 110 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி மைல்கல்லை கடந்துள்ளது. ஒரு காலத்தில் சாத்தியமில்லை என்று நினைத்த ஒன்று, இப்போது சாத்தியமாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலங்களின் சட்டப்பேரவை தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம
இலங்கைக்கு இந்த ஆண்டுக்கான யால பருவத்திற்கு உரம் வழங்
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி
இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதம
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற
தமிழக அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம் செய்து க
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந
இராமேஸ்வரத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் முனியராஜ் என்
விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம