அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டெய்னர் திறந்து ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க தொடங்கின.
சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி பணத்தை அள்ளி சென்றனர். இதுகுறித்து கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம், திருப்பி பணத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். பலர் பணத்தை திருப்பி அளித்தனர். சிலர் பணம் கிடைத்தால் போதும் என அள்ளிக்கொண்டு சென்றனர்
பணம் கொட்டும்போது அந்த வழியாக சென்ற வாகனங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதை வைத்து பணத்தை எடுத்துச் சென்றவர்களை கண்டுபிடித்து வருகிறோம். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காவிடில், கிரிமினல் வழக்கிற்கு உள்ளாவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், டிரக்கை ஓட்டிச் சென்ற டிரைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட டெமி பேக்பி என்பவர், ‘‘இதுவரை நான் இபோன்ற விசித்திரமான சம்பவத்தை பார்த்ததில்லை’’ என வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட
உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளி
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா
பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்
முதன் முறையாக ஜெர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப